கம்பராமாயணம் 5246 · சுந்தர 4.130
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஏழாய்! - அறிவில்லாதவனே; இசையின் - உணர்ந்தால்; பூவிலோன் ஆதியாக - மலர் வீட்டில் இருக்கும் பிரம்ம தேவனைத் தலைமையாகக் கொண்டு; புலன்கள் போம் - ஐம்புலன்களும் ஓடுகின்ற; நெறியில் போகா - தீய வழியில் செல்லாத; தேவரோ - தேவர்களோ; அவுணர்தாமோ - அசுரர்களோ (எவர்); நிலை நின்று - நிலை பெற்று நின்று; வினையில் தீர்ந்தார் - தீவினையிலிருந்து நீங்கியவர்; எவ்வுலகும் - எல்லாவுலகங்களும்; ஏவல் செல்வம் - அடிமை செய்யும்படியான செல்வத்தை, எய்தினார் - பெற்றவர்கள்; முன் நீ செய்த பாவமோ - (உன்னிடத்தில் செல்வம் உள்ளதென்றால் அதற்குக் காரணம்) முன்பு உன்னால் செய்யப்பெற்ற பாவமா (அல்லது); தருமமோ - (முன்பு உன்னால் செய்யப்பெற்ற) அறமா; தெரிய - விளங்கும்படி; பாராய் - ஆராய்வாயாக.
பூ இல்லோன் - மலரை இல்லமாகப் பெற்ற பிரமன். கமலவீடு (மீனாட்சி தமிழ் -18)
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'From the Flower-dwelling One down, which gods or which demons
- who did not go the way the senses run have stood firm and won release from karma?
- Who has gained wealth in any world? If you understand, you fool,
- was it the sin you once did, or your dharma? Look and see clearly!'
What the poem says
Cītai asks Irāvaṇaṉ to think: among the gods, starting with Piramaṉ who dwells on the lotus, and among the demons, who have stood firm and been freed from evil karma? Only those who did not follow where the senses lead.
His own great wealth, which he boasts of, did it come from past sins or from past good deeds? Let him consider honestly, and he will see that it is merit he is now throwing away.