கம்பராமாயணம் 5245 · சுந்தர 4.129

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொன் கணான் தம்பி என்று இனைய போர்த் தொழில்
வில் கண் நாண் பொருத தோள் அவுணர் வேறு உளார்
நல் கணார் நல்லறம் துறந்த நாளினும்
இல் கணார் இறந்திலர் இறந்து நீங்கினார்.

பொருள் · Meaning in Tamil

பொற்கணான் - பொன் மேனியைப் பெற்ற இரணியன்; தம்பி - அவனுடைய தம்பி; என்று - என்று பேசப்பெற்ற; இனைய போர்த் தொழில் - போர்த் தொழிலையும்; வில்கண் நாண் - வில்லின்கண் உள்ள நாண்; பொருத தோள் - மோதும் தோள்களையும் உடைய, அவுணர் - அசுரர்களும்; வேறுளார் - மற்றைய கொடியவர்களும்; நல்கண் ஆர் - நல் அறிவைப் பெற்றவர்கள் (போற்றும்); நல் அறம் - நல்ல தருமத்தை; துறந்த நாளினும் - ஒதுக்கிய காலத்திலும்; இல் - மற்றவன் இல்லாளை; கண்ணார் - கருதி; இறந்திலர் - முறை கடந்திலர்; (அவர் பிற மகளிரைக் காணும் போது) இறந்து - ஒதுங்கி; நீங்கினார் - கடந்து போனார்கள்.

பொற்கணான் - பொன்னுடல் பெற்றவன் (இரணியன்) கண் - உடல். பொன்கண் பச்சை பைங்கண் மால் என்னும் பரிபாடல் (3.82) பகுதிக்கு உரை வழங்கிய அழகர் சிவந்த உடம்பை உடைய காமனே, என்றும் பசிய உடம்பினை உடைய அநிருத்தனே என்றும் விளக்கினார். நற்கண்ணார் - நல்லறிவு உடையவர். கண் - அறிவு. 'கண் சாய்பவர்' என்னும் குறட்கு (927) அழகர் அறிவு தளர்வார் என்று பொருள் பேசினர். பொற்கணான் என்பதை இரணியாட்சனாக்கி இடர்ப்பட்டு விளக்கம் பேசிய திறம் பாராட்டப்பட வேண்டும். அவர்கள் இரணியன், இளையவன் என்றும், இரணியாட்சன் மூத்தவன் என்றும் பேசினர். அவர்கள் இரட்டைப் பிள்ளைகள் என்றனர். (அடை - பதிப்பு)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The Golden-bodied one, his brother, and the other demons
  2. skilled in war, whose shoulders were scarred by the bowstring —
  3. even in the days when they cast aside the good dharma prized by the wise,
  4. never overstepped with another man's wife; they passed her by and went their way.'

What the poem says

Cītai shames Irāvaṇaṉ by comparing him with the worst of the old demons. Hiraṇyakaśipu, called here 'the golden-bodied one', his brother, and other warrior asuras did abandon righteousness.

Yet even they never set their minds on another man's wife; when they saw such women they stepped aside and passed on. Irāvaṇaṉ has sunk lower than any of them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṟkaṇāṉ tampi eṉṟu iṉaiya pōrt toḻil
vil koḷ nāṇ poruta tōḷ avuṇar vēṟu uḷār
naṟkaṇ ār nal aṟam tuṟanta nāḷiṉum
iṟkaṇār iṟantilar iṟantu nīṅkiṉār.