கம்பராமாயணம் 5251 · சுந்தர 4.135

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நீதி நிலை அறிந்திலாத நீசா - நீதி நிலையை அறியாத அற்பனே; ஆயிரம் தடக்கையால் - பெரிய ஆயிரங்கைகளால்; நின் - உன்னுடைய; ஐந்நான்கு கரமும் பற்றி - இருபது கைகளையும் பிடித்து; வாய்வழி - உன்னுடைய வாய்களின் வழியாக; குருதி சோரக் குத்தி - இரத்தம் கொட்டும்படி தாக்கி; வான் சிறையில் வைத்த தூயவன் - சிறந்த சிறையிலே வைத்த தூய கார்த்த வீரியன்; வயிரத் தோள்கள் - வயிரம் பாய்ந்த தோள்களை; துணித்தவன் - வெட்டிய பரசுராமன்; தொலைந்த மாற்றம் - (இராமபிரானுக்கு) தோற்ற செய்தியை; நீ அறிந்திலையோ - நீ அறியவில்லையோ.

பரசுராமன், 'ஓராயிரம் உயர் தோள் வயிரப் பணை துணிய தொடு வடிவாய் மழு உடையான்' என்று முன்பு பேசப்பெற்றான் (கம்ப. 1274) உன்னிலும் வலியனான கார்த்தவீரியனை வென்ற பரசுராமன் இராமனால் வெல்லப்பெற்றான் என்றால் உன் நிலையை அறிக என்பது குறிப்பெச்சம். (தொனி) இப்பாடலின் குறிப்புப் பொருளை - 'வெள்ளி மால்வரையைப் பறிக்கும் கப்டன் பணைப்புயமோ அவன் பைங்கடகம் செறிக்கும் புயஞ்செற்ற ஆயிரம் இண்புயமோ அவற்றைத் தறிக்கும் திறல் மழுமோ சயத்தாருடைத்தே' என்னும் பாடல் வெளிப்படுத்தும். (திருவரங்கமாலை 38)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'With his thousand mighty arms he seized all twenty of your hands,
  2. beat you until blood streamed from your mouths, and kept you in a high prison —
  3. and he who cut off that pure king's diamond-hard arms was himself defeated:
  4. have you not heard that tale? You vile one, who know nothing of what justice is!'

What the poem says

Cītai drives home the chain of defeats. Kārttavīriyaṉ, with his thousand arms, once seized Irāvaṇaṉ's twenty hands, beat him until blood poured from his mouths and threw him into prison.

Paracurāmaṉ cut off Kārttavīriyaṉ's arms, and Paracurāmaṉ in turn was humbled by Irāmaṉ. Has Irāvaṇaṉ not heard? The unstated conclusion is obvious: where does that leave him?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyiram taṭakkaiyāl niṉ ain nāṉku karamum paṟṟi,
vāy vaḻi kuruti cōrak kutti, vāṉ ciṟaiyil vaitta
tūyavaṉ vayirat tōḷkaḷ tuṇittavaṉ tolainta māṟṟam
nī aṟintilaiyō? nīti nilai aṟintilāta nīcā!