கம்பராமாயணம் 5254 · சுந்தர 4.138

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வளர்ந்த தாளினன், மாதிரம் அனைத்தையும் மறைவித்து
அளந்த தோளினன், அனல்சொரி கண்ணினன், 'இவளைப்
பிளந்து தின்பென்! 'என்று உடன்று நின்றனன், அடிபெயரான்,
கிளர்ந்த சீற்றமும் காதலும் எதிர் எதிர் கிடைப்ப.

பொருள் · Meaning in Tamil

வளர்ந்ததாளினன் - வளர்ந்த கால்களை உடையவனாய், மாதிரம் அனைத்தையும் - எல்லாத் திசைகளையும்; மறைவித்து - மறையும்படி செய்து; அளந்த தோளினன் - அளாவிய தோள்களை உடையவனாய்; அனல் சொரி - நெருப்பை உமிழும்; கண்ணினன் - கண்களை உடையவனாய்; (கிளர்ந்த இராவணன்) இவளை - இந்தப் பெண்ணை பிளந்து தின்பென் - பிளந்து தின்று விடுவேன்; என்று உடன்றனன் - என்று சினந்தான்; கிளர்ந்த சீற்றமும் - (மனத்துள்) மிக்கெழுந்த கோபமும்; காதலும் - அடங்கிய காமமும்; எதிர் எதிர் கிடைப்ப - மாறி மாறிப் போரிட (அதனால்); பெயர்ந்தனன் பெயரான் - புறப்பட்டான் - நின்றான் ஆனான்.

இராவணன், கொல்ல எழுந்தான். ஆனால் அவள் மாட்டுக் கொண்ட காதலும் சீற்றமும் எதிரெதிரே சந்தித்துப் போராடியதால் திகைத்துப் போனான்; நின்றுவிட்டான். கிடைத்தல் - போரிடுதல். இருபடைகளும் எதிர் கிடைக்கவே (கலிங்கத்து போர் - 3)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With legs grown tall, with shoulders that spread to blot out
  2. every quarter of the sky, with eyes pouring fire, he raged, 'I will split
  3. this woman open and eat her!' — he moved, and did not move,
  4. as his surging rage and his desire clashed against each other.

What the poem says

Irāvaṇaṉ swells to a gigantic size, his shoulders filling the sky in every direction and his eyes spitting fire, and he roars that he will tear Cītai apart and eat her.

He starts forward and then stops, because his anger and his love for her are locked in combat inside him and neither can win.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaḷarnta tāḷiṉaṉ, mātiram aṉaittaiyum maṟaivittu
aḷanta tōḷiṉaṉ, aṉal cori kaṇṇiṉaṉ, 'ivaḷaip
piḷantu tiṉpeṉ! 'eṉṟu uṭaṉṟaṉaṉ, peyarntaṉaṉ, peyarāṉ,
kiḷarnta cīṟṟamum kātalum etir etir kiṭaippa.