கம்பராமாயணம் 5255 · சுந்தர 4.139
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்ன காலையில் - அந்தச் சமயத்தில்; அனுமனும் - அனுமனானவன்; அருந்ததி கற்பின் - அருந்ததி போன்ற கற்புடைய; என்னை ஆளுடை - என்னை அடிமையாகக் கொண்ட; நாயகன் தேவியை - இராமபிரானின் பத்தினியை; என்முன் - எனக்கு எதிரில்; சொன்ன நீசன் கை - இழித்துப் பேசிய இராவணன் கை; தொடுவதன் முன் - பிராட்டியைத் தொடுவதற்கு முன்பு; துகைத்து - காலாலே மிதித்து; உழக்கி - கையாலே பிசைந்து (கொன்றபின்); பின்னை - மறுபடி; நின்றது செய்குவென் - நிலைத்த நற்பணியைச் செய்வேன்; என்பது - என்னும் எண்ணத்தை; பிடித்தான் - உறுதியாகப் பற்றிக் கொண்டான்.
என்னை ஆளுடைநாயகன் - இராமபிரான். கவிக்கு நாயகர் இருவரும் (அனுமன், கம்பன்) இங்ஙனம் பேசுவர் (கம்ப. 204.) அனுமன், 'நின்றது செய்குவென்' என்றான். அது அடுத்த பாடல் பேசும். அனுமனும் - உம். அசை. 'காமக்கடல் மன்னும் உண்டே' (குறள் 4064, உறை
ஆங்கிலம் · English translationAI
Translation
- At that moment Aṉumaṉ resolved: 'The consort of my master and lord,
- chaste as Aruntati — before the hand of this vile wretch
- who spoke to her so in front of me can touch her, I will trample him and crush him,
- and after that do whatever remains to be done!'
What the poem says
Watching from his hiding place, Aṉumaṉ makes up his mind. If the vile Irāvaṇaṉ, who has insulted the wife of Aṉumaṉ's master in his very presence, so much as lays a hand on her, Aṉumaṉ will stamp on him and crush him first.
Whatever else needs doing can follow afterwards. The next verse spells out his plan.