கம்பராமாயணம் 5256 · சுந்தர 4.140

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தனியன், நின்றனன் தலைபத்தும் கடிது உகத் தாக்கிப்
பனியின் வேலையில் இலங்கையைக் கீழ் உறப் பாய்ச்சிப்
புனித மா தவத்து அணங்கினைச் சுமந்தனன் போவென்
இனிதின் 'என்பதும் நினைந்து தன் கரம் பிசைந்து இருந்தான

பொருள் · Meaning in Tamil

தனியன் - தனித்துள்ள யான்; நின்றனன் - எழுந்து நின்ற இராவணனின்; தலைபத்தும் - பத்துத் தலைகளும்; கடிது உகத் தாக்கி - வேகமாகச் சிதறும்படி மோதி, இலங்கையை - இலங்கை மாநகரை; பனி வேலையில் - குளிர்ந்த கடலின்கண்; கீழ் உற - அடிப்பகுதியை அடைய; பாய்ச்சி - அமிழ்த்துவிட்டு (பிறகு); புனிதம் - தூய்மையான; மாதவத்து அணங்கினை - பெருந்தவம் செய்யும் பிராட்டியை; சுமந்தனென் - சுமந்து கொண்டு; இனிதின் போவென் - மகிழ்ச்சியுடன் (இராவணன்பால்) செல்வேன்; என்பது நினைந்து - என்பதைக் கருதி; தன் கரம் பிசைந்து - தன்னுடைய கரங்களைப் பிசைந்தபடி; இருந்தான் - சந்தர்ப்பம் நோக்கியிருந்தான்.

தனியன் என்பதை இராவணனுக்கு ஆக்கின் அஃது அனுமனுக்கு இழுக்கு. இராவணன் தனியே உள்ளான்; கொல்லல் எளிது என்று வீரனான அனுமன் கருதான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Alone though I am, I will strike so that all ten heads of him who stands there
  2. fall and scatter at once, and drive Ilaṅkai down
  3. to the bottom of the cold sea, and then carry away
  4. the holy lady of great penance and go home happily' — so thinking, he sat wringing his hands.

What the poem says

Aṉumaṉ's plan: single-handed, he will smash all ten of Irāvaṇaṉ's heads, sink the entire city of Ilaṅkai to the bottom of the sea, and then carry Cītai home to Irāmaṉ.

He sits wringing his hands, waiting for the moment. The commentary insists that 'alone' refers to Aṉumaṉ himself; a hero like him would never think of attacking Irāvaṇaṉ merely because the demon was alone.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'taṉiyaṉ, niṉṟaṉaṉ talai pattum kaṭitu ukat tākki
paṉiyiṉ vēlaiyil ilaṅkaiyaik kīḻ uṟap pāycci
puṉita mā tavattu aṇaṅkiṉaic cumantaṉaṉ pōveṉ
iṉitiṉ 'eṉpatu niṉaintu taṉ karam picaintiruntāṉ