கம்பராமாயணம் 5257 · சுந்தர 4.141
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆண்டு - அப்பொழுது; அவ்வாள் அரக்கன் - கொடிய இராவணன்; அகத்து - உள்ளத்தில்; அண்டத்தை அழிப்பான் - அண்டங்களை அழிக்கும் பொருட்டு; மூண்ட - பற்றி எரிகின்ற, வெம்காலத் தீயென - கொடிய காலாக்கினியைப் போல; முற்றிய சீற்றம் - முதிர்ந்த கோபமானது; நீண்ட - மிகுதியான; காமநீர் நீத்தத்தின் - காமமாகிய வெள்ளத்தில்; வீவுறுநிலையின் - அழிந்து போக (அதனால்); மீண்டு - (பிராட்டியைக்) கொல்லவேண்டும் என்னும் நினைவிலிருந்து திரும்பி; நின்று - தாமதித்து; ஒருதன்மையால் - ஒப்பற்ற காமத்தால், இவை இவை விளம்பும் - இவற்றைப் பேசலானான்.
தீயைக் காமப்புனல் அவித்தது. 'நீர் வந்தால் காம நெருப்பழியும் காணுமே' என்று ஒரு தனிப்பாடல் பேசும். (நீர் சிலேடை) நீத்தம் - வெள்ளம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Then, in the heart of that cruel demon, the full-grown rage,
- like the fierce fire of the world's end that blazes up to destroy the universe,
- was quenched in the long flood of the waters of lust;
- he turned back, stood still, and in a certain manner spoke these words.
What the poem says
Irāvaṇaṉ's anger, which had flared up like the fire that consumes the universe at the end of time, is put out by the vast flood of his desire, as water quenches fire.
He draws back from his threat to kill Cītai and, in a softened mood, begins to speak again. A popular verse puns that when water comes, the fire of lust dies.