கம்பராமாயணம் 5258 · சுந்தர 4.142

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கொல்வென் என்று உடன்றேன், உன்னைக் கொல்கிலென், குறித்துச் சொன்ன
சொல் அளவு; அவற்றுக்கு எல்லாம் காரணம் தெரியச் சொல்லின்,
ஒல்வது ஈது, ஒல்லாது ஈது, என்று எனக்கும் ஒன்று உலகத்து உண்டோ?
வெல்வதும் தோற்றல் தானும் விளையாட்டின் விளைந்த மேல்நாள்.

பொருள் · Meaning in Tamil

உன்னைக்கொல்வென் - உன்னைக் கொன்றுவிடுவேன்; என்று உடன்றேன் - என்று சீற்றம் கொண்டேன்; கொல்கிலேன் - கொல்லமாட்டேன்; குறித்துச் சொன்ன - நீ என் மேல் கூறிய; அவற்றுக்கு எல்லாம் - அந்தக் குற்றங்கட்கு; காரணம் தெரியச் சொல்லின் - காரணத்தை விளங்கக் கூறக் கருதின்; சொல் உள - (அதற்கேற்ற) சொற்கள் உள்ளன; ஈது ஒல்வது - இச் செயல் என்னால் நிறைவேற்றக் கூடியது; ஒல்லாது ஈது - இச் செயல் என்னால் நிறைவேற்ற முடியாதது; என்று ஒன்று - என்று வரையறுத்துக் கூறும் ஒரு செயல்கள்; எனக்கும் - பேராற்றல் படைத்த எனக்கும்; உலகத்து உண்டோ - உலகில் உள்ளதா? மேல்நாள் - முற்காலத்தில், வெல்வதும் - (பகைவர்) வெற்றி பெறுவதும்; தோற்றல் தானும் - தோல்வியடைந்ததும், விளையாட்டின் விளைந்த - விளையாட்டைப் போல நிகழ்ந்தன.

தோற்றது, கார்த்த வீரியன் பால் 'நான் விளையாட்டாகத் தோற்றேன், உண்மையில் தோற்கவில்லை'. என்பது இராவணனின் போலிவார்த்தை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'I raged that I would kill you, but I will not kill you. For everything
  2. you have charged me with, if I am to give the reasons plainly, there are words enough.
  3. Is there anything in the world of which even I must say "This I can do, this I cannot"?
  4. Winning and losing, in days gone by, happened only in sport.'

What the poem says

Irāvaṇaṉ, calmer now, says he threatened to kill Cītai but will not do it. He has answers ready for all her accusations.

There is nothing in the world he cannot do. As for the old defeats she mentioned, his victories and losses long ago were mere games. The commentary calls this his feeble excuse for his defeat by Kārttavīriyaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kolveṉ eṉṟu uṭaṉṟēṉ, uṉṉaik kolkileṉ, kuṟittuc coṉṉa
col uḷa; avaṟṟukku ellām kāraṇam teriyac colliṉ,
olvatu ītu, ollātu ītu, eṉṟu eṉakkum oṉṟu ulakattu uṇṭō?
velvatum tōṟṟal tāṉum viḷaiyāṭṭiṉ viḷainta mēlnāḷ.