கம்பராமாயணம் 5259 · சுந்தர 4.143
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஒன்று - ஒரு வார்த்தையை; உரைக்க கேள் - யான் கூற நீ கேட்பாயாக, நிற்கு - உனக்கு; ஓர் உயிர் என - ஒப்பற்ற உயிர் போல; உரியோன் தன்னை - உனக்கு உரிமையான இராமனை; கொன்று - கொன்ற பின்; கோள் இழைத்தால் - உன்னைக் கொண்டு வருதலைச் செய்தால்; (அதனால்) நீ நின் உயிர்விடின் - நீ உன் உயிரை விட்டு விட்டால்; கூற்றம் கூடும் - யமன் வருவான் (அதனால்); என்தன் ஆருயிரும் - என்னுடைய அரிய உயிரும்; நீங்கும் - என்னைவிட்டு நீங்கும்; என்பதை - என்னும் உண்மையை; இயைய எண்ணி - பொருந்த ஆராய்ந்து (அதனால்); நான் அன்று - நான் அன்றைய தினம்; வஞ்சம் செய்தது - வஞ்சகம் செய்தது; அமரில் - போரில்; எனக்கு நேர்வார் யார்? - எனக்குச் சமமானவர் எவர்.
இராவணன், தன் வஞ்சகச் செயலுக்குக் கூறும் சமாதானம் 'மாயையால் மறைந்து வந்தாய்' என்ற பிராட்டியின் சொல்லுக்கு மாற்றம் (பதில்) கோள் இழைத்தல் - கவர்ந்து வருதல். கொள்ளுதல் என்னும் தொழிற் பெயர் கோள் என நின்றது. முதல் நிலை திரிந்த தொழிற்பெயர் 'குற்றம் கூடும்' - என்னும் பாடமும் உள்ளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Hear one thing I have to say. If I had killed him who is your very life
- and then carried you off, you would have given up your life, and the guilt would be mine,
- and my own dear life would go as well — it was because I thought this through
- that I used deceit that day. Who could ever face me in battle?'
What the poem says
Irāvaṇaṉ replies to Cītai's charge that he came in disguise out of fear. If he had killed Irāmaṉ, who is her life, and then taken her, she would have died of grief, and with her his own life, since he cannot live without her.
That is why he chose trickery that day, not fear: who in the world could stand against him in battle? One manuscript reading has 'death would come' in place of 'guilt would attach'.