கம்பராமாயணம் 5260 · சுந்தர 4.144

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தேன் என்பது - தேன் என்று சிறப்பித்துப் பேசும் பொருளும்; அறிந்த - (இன்பம்) அனுபவிக்கும்படியான; சொல்லாய்! - சொற்களைப் பேசுபவளே; மான் என்பது அறிந்து போன - மான் என்பதை அறிந்து அதன்பின் சென்ற; மானிடர் ஆவார் - மனிதராக இருக்கின்றவர்கள்; மீண்டு - திரும்பிவந்து; யான் என்பது அறிந்தால் - (உன்னைக் கவர்ந்து சென்றது) யான் என்று அறிந்தால்); வாரார் - இலங்கைக்கு வரமாட்டார்கள்; எண்ணி நோக்கல் - (அவர்கள்) வருவார் என்று நினைந்து எதிர்பார்த்தல்; ஏழைமை - அறியாமையாகும்; தேவர்தாம் - எந்தத் தேவர்களாக இருந்தாலும்; எம் கோன் என்பது அறிந்த பின்னை - இச் செயல் செய்தவன் எம் தலைவனான இராவணன் என்று அறிந்த பிறகு; குறையின் அல்லால் - மனம் தளர்வாரேயல்லாமல்; யாவர் திறம்புவார் - எவர் முறை தவறி நடப்பார்.

தேனும் அனுபவிக்கும் இனிய மொழி. இங்ஙனம் கூறுவது கவிச் சக்கரவர்த்தியின் இயல்பு. 'யாழ்க்கும் இன் குழற்கும் இன்பம் அளித்தன இவையாம் என்னக் கேட்கும் மென் மழலைச் சொல்' (கம்ப. 974) என்று கூறப்பெற்றது. மான் என்பது அறிந்து போன என்பதில் உள்ள அறிதல் அசதி மொழி - மாயமானுக்கும் உண்மை மானுக்கும் வேறுபாடு அறியாதவர்கள் என்றபடி. திறம்புதல் - கடந்து வருதல் (முறை தவறுதல்) குறைதல் - மன எழுச்சி தளர்தல். யாவர் திறம்புவார் என்று முடிக்க. கோன் என்பது பின்னைத் திறம்புவர் குறையின் அல்லார் - ஒரு காரியம் நான் செய்தேன் என்றால் அத் தேவர்கள் அறிந்தாலும் எங்கள் இறைவன் செய்தான் என்பர் அல்லாமல் மாறுபடார். தாழ்வர் என்பது பழைய உரை (அடை - பதி)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Those men, who went off after it knowing so well that it was a deer,
  2. once they come back and learn it was I, will not come here; to watch for them is folly,
  3. you whose words even honey would wish to taste! Which of the gods,
  4. once they know it is our king, would dare oppose him, rather than shrink back?'

What the poem says

Irāvaṇaṉ mocks the brothers: they chased off after the deer believing it was a real deer, and once they find out that it was he who took her, they will never dare come to Ilaṅkai.

It is foolish of her to wait for them. Even the gods, once they learn the deed was his, only cower; who would defy him? He flatters her with a compliment Kampaṉ often uses: her speech is so sweet that honey itself would savour it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māṉ eṉpatu aṟintu pōṉa māṉiṭar āvār mīṇṭu
yāṉ eṉpatu aṟintāl vārār, ēḻaimai eṇṇi nōkkal
tēṉ eṉpatu aṟinta collāy! tēvartām yāvarē em
kōṉ eṉpatu aṟintu piṉṉait tiṟampuvār, kuṟaiyiṉ allāl?