கம்பராமாயணம் 5267 · சுந்தர 4.151

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(இராவணன்)

வஞ்சியின்செவ்வியாளை - வஞ்சிக் கொடியைவிட மென்மை வாய்ந்த சீதையை; ஒன்றால் - ஒரு உபாயத்தால்; அஞ்சுவித்தானும் - அச்சமடையச் செய்தாவது (அன்றேல்); ஒன்றால் - வேறு ஒரு உபாயத்தால்; அறிவுறத் தேற்றியானும் - அறிவில் பொருந்தும்படியாகத் தெளிவை உண்டாக்கியாவது; வசித்து - வசப்படுத்தி (பிறகு); என்பால் வருவீர் - என்னிடத்தில் வருவீராக; அன்றேல் - அவ்வாறு செய்யாமற் போனால்; உமக்கு நஞ்சு ஆவென் - உங்கட்கு நான் விடம் ஆவேன்; என்னா - என்று; நகையிலா முகத்து - சிரிப்பறியா முகத்தையும்; பேழ்வாய் - பிளந்த வாயையும்; வெஞ்சினத்து - கொடுங் கோபமும் (பெற்ற); அரக்கிமார்க்கு - அரக்கிகட்கு; வேறு வேறு - தனித்தனியாக; உணர்த்திப் போனான் - அறிவுறுத்திச் சென்றான்.

வசித்து - வசப்படுத்தல். தன்னால் முடியாததைத் தன் பணிப் பெண்கள் முடிப்பர் என்று நினைத்த இராவணனின் அறியாமை பெரிது. ஆசை அறிவை அழிக்கும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Whether by frightening her, or by making her see sense with some argument,
  2. bring round this lady, lovelier than the vañci creeper, and then come to me! Otherwise
  3. I shall be poison to you!' So he told
  4. the cruel-tempered ogresses, with their gaping mouths and faces that never smile, each one separately, and went away.

What the poem says

As he leaves, Irāvaṇaṉ gives orders to each of the guard ogresses, grim-faced and wide-mouthed, one by one. They must win Cītai over to him, whether by terrifying her or by reasoning with her, and then report to him.

If they fail, he will be death to them. The commentary remarks on the folly of thinking his servants could achieve what he himself could not; desire destroys judgement.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'añcuvittāṉum, oṉṟāl aṟivuṟat tēṟṟiyāṉum,
vañciyiṉ cevviyāḷai vacittu, eṉpāl varuvīr! aṉṟēl,
nañcu umakku āveṉ! 'eṉṉā, nakai ilā mukattup pēḻ vāy
veñ ciṉattu arakkimārkku vēṟu vēṟu uraittup pōṉāṉ.