கம்பராமாயணம் 5268 · சுந்தர 4.152
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அரக்கன் போயினன் - இராவணன் சென்றுவிட்டான்; பின்னை - பிறகு; பொங்கு அரா - குமுறுகின்ற இராகு என்ற பாம்பு; நுங்கி கான்ற - விழுங்கிக் கக்கிய; தூயவெண் மதியம் ஒத்த - தூய்மையான சந்திரனைப் போன்ற, தோகையை - மயில்போலும் பிராட்டியை; தீயவல் அரக்கிமார்கள் - தீமை புரிவதில் வல்ல அரக்கிகள்; தொடர்ந்து சுற்றி - நெருங்கிச் சுற்றியிருந்து கொண்டு; தெழித்து - முழக்கி; இழித்து - அவமதித்து; உரப்பி - அதட்டி (பிறகு); சிந்தை மேயின வண்ணம் எல்லாம் - மனம் போனபடி எல்லாம்; உடன்று விளம்புவான் மிக்கார் - சீறிப் பேசத் தொடங்கினார்கள்.
இராவணனின் கொடுஞ்சொற்களில் இருந்து மீண்ட பிராட்டி இராகுவின் பிடியிலிருந்து விடுதலை பெற்ற மதி போன்றிருந்தாள். தொடர்ந்து - நெருங்கி. நிமிர்ந்தும் தொடர்ந்தும் (பரிபாடல் 19-82) என்னும் பகுதி இடையிட்டும் நெருங்கியும் என்று அழகரால் விளக்கப் பெற்றது. நுங்குதல் - விழுங்குதல். 'அரவு நுங்குமதியின் ஐயென மறையும்' (அகம் 114).
ஆங்கிலம் · English translationAI
Translation
- The demon went away. Then, around the peahen-like lady,
- who was like the pure white moon that the raging serpent has swallowed and spat out,
- the cruel, strong ogresses closed in, surrounding her, and roaring, insulting and threatening,
- they set about saying, in their fury, whatever came into their minds.
What the poem says
Irāvaṇaṉ has gone. Cītai, freed from his presence, is like the moon released after being swallowed by the eclipse-serpent Rāku.
But her relief is short-lived. The wicked ogresses crowd around her and begin to shout, abuse and threaten her, saying whatever cruelty comes into their heads, as he ordered.