கம்பராமாயணம் 5269 · சுந்தர 4.153

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1முன்முன் நின்றார் கண் கனல் சிந்த முடுகு உற்றார்,
மின்மின் என்னும் சூலமும் வாளும் மிசை ஓச்சிக்
'கொல்மின்! கொல்மின்! கொன்று குறைத்துக் குடர் ஆரத்
தின்மின்! தின்மின்! 'என்று தெழித்தார் சிலர் எல்லாம

பொருள் · Meaning in Tamil

முன் முன்நின்றார் - பிராட்டியின் முன்னாலேநின்றவர்களாகிய, சிலர் எல்லாம் - சில அரக்கிமார்கள்; கண்கனல் சிந்த - கண்களிலிருந்து நெருப்புச் சிதற; முடுகுற்றார் - (பிராட்டியின்பால்) விரைந்துபோய்; மின்மின் என்னும் - மின்னுகின்ற மின்னல் போலும்; சூலமும் வேலும் - சூலத்தையும் வாளையும்; மிசை ஓச்சி - தலைக்கு மேலே உயர்த்தி (இவளை); கொல்மின் கொல்மின் - கொல்லுங்கள் கொல்லுங்கள்; கொன்று குறைத்து - கொன்று துண்டுகளாக்கி; குடர் ஆர - வயிறு நிரம்ப; தின்மின் தின்மின் - தின்னுங்கள் தின்னுங்கள்; என்று - என்று கூறி; தெழித்தார் - அரட்டினார்கள்.

முடுகுற்றார்-முற்றெச்சம், வினை எச்சப் பொருளில் வந்துள்ளது. மிசை - தலைக்கு மேலே. ஓச்சி - உயர்த்தி. மின்மின் - மின்னும் மின்னல். வெல்லும் வேலை வெவ்வேல் என்பதுபோல் வந்தது. குறைத்தல் - துண்டித்தல்.

இச் சந்தக்கலித்துறை மா- மா- விளம் - மா- காய் என்னும் ஐந்து சீர்களைப் பெற்றுவரும். இதனை வடநூலார் “மத்த மயூரம்” என்பர் இத்தகு பாக்கள் இந்நூலில் 154 இடங்களில் காண்கிறோம் (மணிமலர் 70).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those who stood right in front of her rushed forward, fire scattering from their eyes;
  2. raising high their tridents and spears that flashed like lightning,
  3. "Kill her! Kill her! Kill her, hack her to pieces, and till your bellies are full
  4. eat her! eat her!" so some of them roared.

What the poem says

The scene is the Aśōka grove in Ilaṅkai, just after Irāvaṇaṉ has left Cītai with threats. The demon women set to guard her now turn on her: some rush at her with blazing eyes, brandishing tridents and spears and shouting that she should be killed, cut up and eaten.

The repeated cries, kill and eat, catch the savage din of the guards. This verse opens a run in a lively five-foot metre that the commentary notes is used in many places in the poem.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṉ muṉ niṉṟār kaṇ kaṉal cinta muṭukuṟṟār,
miṉ miṉ eṉṉum cūlamum vēlum micai ōcci
'kolmiṉ! kolmiṉ! koṉṟu kuṟaittuk kuṭar ārat
tiṉmiṉ! tiṉmiṉ! 'eṉṟu teḻittār cilar ellām.