கம்பராமாயணம் 5270 · சுந்தர 4.154
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சிலர் எல்லாம்- வேறுசில அரக்கிமார்கள் (பிராட்டியை நோக்கி); வினை வென்றோன் - செயலில் வெற்றி பெறும் இராவணன்; வையம் தந்த - உலகத்தைப் படைத்த; நான்முகன் மைந்தன் - பிரம்ம தேவனுடைய மகனான புலத்தியனது; மகன் மைந்தன் - மகனின் (விச்சிரவசு) புதல்வன்; ஐயன் - தன்னிகரற்ற தலைவன்; வேதம் ஆயிரம் வல்லோன் - ஆயிரம் வேதங்களை அறிந்தவன்; அறிவாளன் - அறிவிற் சிறந்தவன் (அவன்); உன்பால் - உன்னிடத்தில்; மெய் அன்பு - உண்மையான அன்பை, வைத்துளது அல்லால் - வைத்ததை அன்றி (அவன்); செய்யும் புன்மை - செய்யும் இழிவு; யாது - எதுவோ; என்றார் - என்று சொன்னார்.
உயர்குடிப்பிறப்பும், கல்வியும் பெற்றவன். உன் காரணமாக இழிதொழில் செய்கிறான் என்றால் அதற்குக் காரணம் அவன் உன்பால் கொண்ட காதலே என்று கூறிப் பிராட்டியை மருட்டுகின்றனர். அரக்கியர் தம்மை அறியாமல் இராவணன் செயல் புன்மை என்கின்றனர் இராவணனின் தந்தை விச்சிரவசு. விச்சிரவசுவின் தந்தை புலத்தியன். புலத்தியன் தந்தை பிரமன். சூர்ப்பனகை, தன்னைப் பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி என்று பேசுவதை முன்பு பார்த்தோம் (சூர்ப்ப - 39). சாமவேதம் ஆயிரம் சாகை உடையது. ஆதலின் அது ஆயிரவேதம் என்று சிறப்பிக்கப்பெற்றது. ஆயிரமறைப் பொருள் உணர்ந்து அறிவமைந்தாய் என்று இராவணன் புகழப்படுவான். ஐயன் - அழகியவன் என்பது ஏற்புடைப்பொருள் - பெண்டிர் விரும்புவது அழகையாதலின் இராவணன் அழகன் என்று அரக்கியர் குறித்தல் பொருத்தமன்றோ. “இன்மையும் வனப்பும்” பெண் விரும்புவது என்னும் பெருங்கதை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Son of the son of the son of the four-faced one who gave us the world,
- a lord, master of the thousand Vedas, a man of wisdom:
- apart from having set true love on you, what baseness
- has he done, this victor in every deed?" said some of them.
What the poem says
Other guards try a different tack: they praise Irāvaṇaṉ's birth and learning to win Cītai over. He is the great-grandson of Brahmā, the four-faced creator, through Pulattiyaṉ and Viccuravacu, and he knows the 'thousand Vedas', a name for the Sāma Veda with its thousand branches.
Their argument is that whatever shameful thing he has done, he did only out of true love for her. Without meaning to, the demon women admit that his conduct was base.