கம்பராமாயணம் 5271 · சுந்தர 4.155
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சிலர் எல்லாம்- வேறுசில அரக்கிமார்கள்; பெண்ணில் தீயோய் - பெண்களுக்குள் தீயவளே; புண்ணில் கோலிட்டாலன - புண்ணிலே அம்பை ஏவினாற்போல; சொல்லி - கொடிய வார்த்தைகளைப் பேசி, நின்முதல் - உன் காரணமாக; தீய மானுயர் - தீய இராமலக்குவர்கள்; தத்தம் வழியோடும் - தங்கள் தங்கள் மரபுடன்; மண்ணில் - பூமியில்; மாயும் பிணிசெய்தாய் - அழிவதற்கு ஏதுவான நோயை உண்டு பண்ணினாய், பொதுநோக்காது - எல்லோரையும் சமமாகப் பாராமல்; எண்ணி - (சிறப்புற)ஆராய்ந்து; மெய்ம்மையை - உண்மையை; காணாய் - பார்ப்பாயாக; என்றார் - என்று கூறினர்.
வழி - மரபு. முதல் - காரணம். எண்ணில் காணாய் - என்று பாடங்கொண்டு பொது நோக்காது எண்ணில் மெய்ம்மை காணாய் என்று கூட்டி, பொதுவாகப் பாராமல் எண்ணினால் மெய்ம்மையைக் காணமாட்டாய் என்று உரை கூறினும் ஏற்கும் - பாரபட்சம் பாராதே என்றுஅறிவுறுத்துகிறார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "You, the most wicked of women! Because of you the wicked men on earth, together with their lines,
- you have brought on themselves a sickness that will make them perish!
- Speaking words like an arrow driven into a wound, do not look on all alike:
- think it over and see the truth!" said some of them.
What the poem says
A third group of guards blames Cītai herself. By her stubbornness, they say, she has doomed Irāmaṉ and Ilakkuvaṉ, whom they call wicked mortals, and their whole family line.
Her harsh replies to Irāvaṇaṉ were like an arrow pushed into an open wound. They urge her not to weigh both sides as equal but to think and see where the truth lies. The commentary notes that a variant reading gives a different sense: if you think without partiality you will not find the truth.