கம்பராமாயணம் 5272 · சுந்தர 4.156
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சிலர் எல்லாம்- வேறுசில அரக்கிமார்கள்; உணர்வு இல்லாய் - அறிவற்றவளே (நீ); புக்க வழிக்கும் - புகுந்த கணவன் மரபுக்கும்; போந்த வழிக்கும் - பிறந்த தந்தை மரபுக்கும்; புகை வெந்தீ - புகையுடன் கூடிய நெருப்பை; ஒக்க - ஒருசேர ; விதைப்பான் உற்றனை அன்றோ - அள்ளித் தெளிக்க வந்துள்ளாய் அல்லவா; இக்கணம் இற்றாய் - நீ இப்பொழுதே அழிந்தாய்; உன் இனம் எல்லாம் - உன் கூட்டம் முழுவதும்; இனி வாழா - இனிமேல் வாழப்போவதில்லை; சிக்க உரைத்தேம் - உறுதியாகச் சொன்னோம்; என்று தெழித்தார்- என்று கூறி அதட்டினர். புக்கவழி - புகுந்த மரபு (தசரதன் மரபு) போந்த வழி -பிறந்த மரபு (சனகன் மரபு) சிக்க - உறுதியாக. அரக்கர் இயல்பு தெழித்துப் பேசுதல் போலும். நாவரசர் இராவணனை திண்ணமாத் தெழித்து நோக்கி உணரா ஆண்மையான், என்று இராவணப் பதிகத்தில் பேசுவார் (தேவாரம் 34).
ஆங்கிலம் · English translationAI
Translation
- "On the house you entered and the house you came from, smoking, scorching fire
- you have come to sow alike, have you not, you senseless one!
- This very moment you are finished! All your kin will live no more!
- We tell you plainly!" so some of them roared.
What the poem says
More guards shout at Cītai. By refusing Irāvaṇaṉ she is, they say, scattering fire over both families she belongs to: the line she married into, that of Tacarataṉ, and the line she was born into, that of Caṉakaṉ.
They declare that she is already as good as dead and that her whole kin is doomed. The commentary remarks that roaring and threatening speech seems to be the demons' nature, and cites a Tēvāram hymn that uses the same word of Irāvaṇaṉ.