கம்பராமாயணம் 5273 · சுந்தர 4.157

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கொல்வான் உற்றோர் பெற்றியும், 'யாதும் குறையாதோன்
வெல்வான் நம் கோன்! தின்னுமின்! வம்! 'என்பவர் மெய்யும்,
வல்வாய் வெய்யோன் ஏவலும், எல்லாம் மனம் வைத்தாள்,
நல்வாய் நல்லாள், கண்கள் கலுழ்ந்தே நகுகின்றாள்.

பொருள் · Meaning in Tamil

யாதும்குறையாதாள் - எத்துன்பத்தாலும் மனம்குறையப் பெறாத; நல்லாள் - பிராட்டி; கொல்வான் - கொல்லும் பொருட்டு; உற்றோர் பெற்றியும் - அணுகிய சில அரக்கிகளின் தன்மையையும்; நம்கோன் - நம் தலைவனான இராவணன்; வெல்வான் - வெற்றியடைவான் (ஆகையால்); தின்னுமின் - இவளைத் தின்னுங்கள்; வம் - வாருங்கள்; என்பவர் மெய்யும்- என்று கூறிய சில அரக்கியர்களின் உடற்பருமனையும்; வல்வாய் - கொடியமொழிபேசும்; வெய்யோன் - கொடிய இராவணனின்; ஏவலும் - கட்டளையையும், எல்லாம் - யாவற்றையும்; மனம் வைத்தாள் - மனத்திலே எண்ணிப் பார்த்து; நல்ல கண்கள் கலுழ்ந்து - நல்ல கண்களில் கண்ணீர் ததும்பி; நகுகின்றாள் - சிரிப்பவளானாள்.

பெற்றியும், மெய்யும், ஏவலும் எல்லாம் மனம் வைத்தாள் கலுழ்ந்து நகுகின்றாள். வல்வாய் வெய்யோன் - எமன். ஏவலில் - அவன் தூதரைப் போல் என்பது பழையவுரை (அடை - பதி). நகுதல் - துயரம் மிகுதியால் வந்தது. கலுழ்தல் - கலங்குதல் - அழுதல். கண்தாம் கலுழ்வது எவன்கொல் என்பது வள்ளுவர் தந்த தொடர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She who lacked nothing in virtue, weighing the nature of those who had come to kill her,
  2. the bodies of those who cried "Our lord will win! Eat her! Come!",
  3. and the command of the harsh-mouthed cruel one, all of it, in her mind,
  4. the good lady of the lovely mouth wept from her eyes and yet laughed.

What the poem says

Cītai, unshaken by any suffering, takes stock of everything around her: the guards who came to kill her, the huge bodies of those calling to eat her, and the order of the cruel king behind them.

Her eyes fill with tears and she laughs at the same time. The laughter comes from the very excess of her grief. An older reading takes the 'harsh-mouthed cruel one' to be Yama, the god of death, with the guards like his messengers. The phrase about weeping eyes echoes a line of Tiruvaḷḷuvar.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kolvāṉ uṟṟōr peṟṟiyum, yātum kuṟaiyātāḷ,
'velvāṉ nam kōṉ! tiṉṉumiṉ! vam! 'eṉpavar meyyum,
val vāy veyyōṉ ēvalum, ellām maṉam vaittāḷ,
nalvāy nallāḷ, kaṇkaḷ kaluḻntē nakukiṉṟāḷ.