கம்பராமாயணம் 529 · பால 9.63

Section பால காண்டம் / 9. அகலிகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பள்ளி நீங்கிய பங்கயப் பழன நல் நாரை,
வெள்ள வான் களை களைவு உறு கடைசியர் மிளிர்ந்த
கள்ள வாள் நெடும் கண் நிழல் கயல் எனக் கருதா,
அள்ளி, நாண் உறும், அகன் பணை மிதிலை நாடு அடைந்தார்.

பொருள் · Meaning in Tamil

பங்கயப் பழனம் - தாமரைகளையுடைய வயல்களிலே; பள்ளி நீங்கிய - அப்போதுதான் உறக்கம் நீங்கிய; நல் நாரை - நல்ல நாரைகள்; வெள்ள வான்களை - நீர் பெருக்கிலே தோன்றுகின்ற நீண்ட களைகளை; களைவுறும் - பறிக்கின்ற; கடைசியர் - உழத்தியரின்; மிளிர்ந்த - பிறழுகின்ற; கள்ள வாள் நெடுங்கண் - (ஆண்களின் உள்ளத்தை மயக்கும்) ஒளியுள்ள கண்களின்; நிழல் - சாயையை; கயல் எனக் கருதா - கயல் மீன்களென்று கருதி; அள்ளி - தம் மூக்கால் குத்தியெடுத்து; நாணுறும் - அவை மீன்களாக இல்லாமையால்) வெட்கம் அடைவதற்கு இடமான; அகல் பணை - பரப்புடைய மருதநிலம் சூழ்ந்த; மிதிலை நாடு அணைந்தார் - மிதிலை நாட்டை மூவரும் சேர்ந்தார்கள்.

மிதிலை நாடு: வயல்களில் உள்ள பங்கய மலர்களிலே அப்பொழுதான் உறக்கம் நீங்கிய நாரைகள் இன்னும் தூக்கக் கலக்கத்தால் மயங்கியுள்ளன. வயலில் களைபறிக்கும் உழத்தியரின் கண் பிரதி பிம்பத்தை அந்த நாரைகள் கயலென்று கருதிக் கொத்தி அவை மீன்கள் அல்ல என்பதை அறிந்து வெட்கமடைந்து மறைதற்கு இடமான வயல் நிலத்திற்குச் சென்றன. மயக்க அணி: மகளிர் கண்களின் நிழலைக் கயல் மீன் என்று கருதி நாரைகள் மயங்கெவாகக் கூறியதால். வான்களை: வயல்களில் தாமரைகளே களைகளாக உள்ளன. ஒப்புமை: கண்ணும் கயலும்: வடிவமும் பிறழ்ச்சியும் பற்றிக் கண்ணிற்குக் கயல் உவமையாயிற்று. கம்பன் 41

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Where the good herons of the lotus fields, just risen from sleep,
  2. seeing the shadows of the darting, bright, long, roguish eyes of the field-women
  3. who pull up the tall weeds in the flooded paddies, and taking them for kayal fish,
  4. scoop them up and are put to shame — to the land of Mitilai with its wide fields they came.

What the poem says

The travellers enter the country of Mitilai (Mithilā), King Caṉakaṉ's land, and Kampaṉ shows how rich it is. Herons, still drowsy from a night among the lotuses, see the reflected eyes of the women weeding the flooded fields and mistake them for darting kayal fish. They peck at the water, find nothing, and slink away in embarrassment.

This is the figure of "delusion," where something is taken for something else. Women's eyes are often compared to kayal fish for their shape and quick movement. In these fields the weeds are the lotuses themselves.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paḷḷi nīṅkiya paṅkayap paḻaṉa nal nārai,
veḷḷa vāṉ kaḷai kaḷaivuṟum kaṭaiciyar miḷirnta
kaḷḷa vāḷ neṭuṅ kaṇ niḻal kayal eṉak karutā,
aḷḷi, nāṇuṟum, akaṉ paṇai mitilai nāṭu aṇaintār.