கம்பராமாயணம் 5290 · சுந்தர 5.15

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இப்பெரும்பழி - இந்தப்பெரிய பழியை; எப்பொழுது எய்தினேன் - எப்போது அடைந்தேனோ; அப்பொழுது - அந்தச் சமயத்திலேயே; உயிர்துறக்கும் - உயிரை விட்டு விடும்; ஆணையேன் - ஆன்றோர் மரபை உடைய யான்; உலகம் - உலக மக்கள்; ஒப்பரும் பெருமறு - ஒப்பற்ற பெரிய நிந்தையை; ஓத - கூறிக்கொண்டிருக்க (கவலைப்படாது); யான் - நான்; துப்பு அழிந்து உய்வது - பெருமை அழிய வாழ்வது; துறக்கம் துன்னவோ - சுவர்க்கத்தை அடையவோ.

பழி-இலங்கையில் சிறையிருத்தல். துப்பு - பெருமை. ஆணை - ஆன்றோர் மரபு (கம்பராமாயண அகராதி) துறக்கம் துன்னவோ, எதிர்மறைத் தொனி. உயிர்துறத்தல் - உயிரை விட்டுவிடுதல். பழியின் - என்பதில் உள்ள “இன்” அசை கற்பினின் திரிதல் இன்றி (சிந்தாமணி 604) இனியர் 'இன்' அசை என்றார். உலகம் பெரும்பழி ஓத யான் உய்வது துறக்கம் துன்னவோ எனக்கூட்டுக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The moment I fell into this great disgrace,
  2. at that very moment I, bound by the rule of the noble, should have given up my life;
  3. while the world recites my matchless great stain, is it
  4. to reach heaven that I live on with my honour destroyed?

What the poem says

Cītai feels that the tradition of noble women bound her to give up her life the moment she fell into this disgrace, her captivity in Ilaṅkai.

Instead she lives on while the world talks of her shame. She asks, in scorn, whether living on like this, honour gone, will win her heaven. The question expects the answer no.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ep poḻutu ip perum paḻiyiṉ eytiṉēṉ
ap poḻutē uyir tuṟakkum āṇaiyēṉ:
oppu arum peru maṟu ulakam ōta yāṉ
tuppu aḻintu uyvatu tuṟakkam tuṉṉavō?