கம்பராமாயணம் 5296 · சுந்தர 5.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(பிராட்டி) ஆதலான் - ஆகையினாலே; இறத்தலே - யான் இறப்பது தான்; அறத்தின் ஆறு - அறத்தினால் காட்டப் பெற்ற வழியாகும்; எனா - என்று உறுதிப்படுத்திக் கொண்டு; சாதல் காப்பவரும் - யான் இறப்பதைத் தடுப்பவரும்; என் தவத்தின் - என்னுடைய தவத்தினாலே; சாம்பினார் - மயங்கியுள்ளனர்; ஈது அலாது - இந்தச் சமயம் தவிர; வேறு இடமும் இல்லை - வேறு சந்தர்ப்பம் இல்லை; என்று - என்று தனக்குள் கூறிக்கொண்டு; உலாம் - சூழ்ந்துள்ள; போது - மலர்களைப் பெற்ற; ஒரு மாதவிப் பொதும்பர் - ஒரு குருக்கத்திச் சோலையை, எய்தினாள் - அடைந்தாள்.
'ஆதலால்' என்னும் முடிபுநிலைச்சொல் மேலே போந்த (11-20) பத்துப் பாடலை நோக்க நின்றது. அப்பாடல்களில் “இறப்பது நன்று” என்னும் முடிவுக்குக் காரணங்கள் நினைக்கப்பெற்றன. போது உலாம் - மலர் சூழ்ந்த. “தூசு உலாய்க் கிடந்த அல்குல்” (சிந்தாமணி 550) அங்கு இனியர் உலாய் - சூழ்ந்து என்று குறித்தார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Therefore dying is the path of dharma," she resolved;
- "even those who would prevent my death have swooned through my penance;
- there is no other chance but this," she said, and to a
- mādhavi bower where blossoms roamed she went.
What the poem says
This verse draws together the reasoning of the previous ten. Cītai concludes that death is the path dharma shows her. The guards who would stop her are lying senseless, which she takes to be the fruit of her own penance, and she sees that she will get no other chance.
So she goes to a flowering bower of mādhavi creepers, meaning to end her life there.