கம்பராமாயணம் 5295 · சுந்தர 5.20

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அற்புதன் - அதிசயப்பண்புற்ற இராமபிரான்; அரக்கர் தம் வருக்கம் - அரக்கர்களின் குலம்; ஆசு அற - பற்றுக்கோடு இல்லாமல்; வில் பணி கொண்டு - வில்லை ஏவல் கொண்டு; அருஞ்சிறையின் - கொடிய சிறையிலிருந்து; மீட்ட நாள் - மீட்கும் காலத்தில்; இல்புகத் தக்கலை அல்லை - என் வீட்டில் நுழையத் தகுதியுடையை அல்லை என்று; என்னில் - என்று கூறினால்; யானுடைக் கற்பினை - யான் கொண்டுள்ள கற்பை; எப்பரிசு - எந்த வகையால்; இழைத்துக் காட்டுகேன் - நிரூபித்துக் காண்பிப்பேன்.

ஆசு - பற்றுக்கோடு. குற்றம் என்றும் கூறலாம். பணி கொண்டு - ஏவல் கொண்டால். “பாவியேனைப் பணி கொண்டாய்” என்பர்மணிவாசகர். “வானவரைப் பணிகொண்ட மருகாவோ” என்பாள் (கம்ப. 2842.) சூர்ப்பணகை - இராமன் வில்லின் பணி கொண்டான் இழைத்தல் - நிரூபித்தல், பரிசு - தன்மை, மீட்ட நாள்- கால மயக்கு, எதிர்காலம் இறந்தகாலமாகப் பேசப்பட்டது. தக்கலை - முன்னிலை ஒருமை எதிர்மறை வினைமுற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On the day the wondrous one, making his bow do his bidding,
  2. wipes out the race of demons and frees me from this cruel prison,
  3. if he says, "You are not fit to enter my house,"
  4. how shall I prove my chastity and show it?

What the poem says

Cītai looks ahead to the day of her rescue. Irāmaṉ will use his bow to destroy the demon race and free her; but what if he then tells her she is not fit to come back into his home?

She has no way to prove her chastity. Her fear foreshadows the fire ordeal at the end of the war. The commentary notes that 'the day he freed me' uses a past tense for a future event.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṟputaṉ arakkartam varukkam ācu aṟa
vil paṇi koṇṭu aruñ ciṟaiyiṉ mīṭṭa nāḷ
'il pukat takkalai! 'eṉṉiṉ yāṉuṭaik
kaṟpiṉai epparicu iḻaittuk kāṭṭukēṉ?