கம்பராமாயணம் 5298 · சுந்தர 5.23

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அனுமன் கண்டனன்- அனுமன்பிராட்டியைப் பார்த்தான்; கருத்தும் எண்ணினான் - பிராட்டியின் நினைவை ஆராய்ந்து; (அதனால்) துணுக்கம்கொண்டனன் - திடுக்குற்றான்; மெய்தீண்டக் கூசுவான் - பிராட்டியின் மெய்யைத் தீண்ட அஞ்சிய அனுமன்; அண்டர் நாயகன் - தேவர்களின் தலைவனான இராமபிரானின்; அருள் தூதன் யான் - திருவருள் பெற்ற தூதன் யான்; எனா - என்றுகூறி; தொண்டைவாய் - கோவைக் கனிபோலும் வாயை உடைய; மயிலினை - மயில்போன்ற பிராட்டியை; தொழுது - வணங்கி; தோன்றினான் - வெளிப்பட்டான்.

பிராட்டியின்தற்கொலை முயற்சி அனுமனுக்குத் துணுக்கைத் தந்தது. அவள் செயலைத் தடுக்க வேண்டும் என்றால் மேனி தீண்ட வேண்டும். அது செய்ய அஞ்சிய அனுமன் “யான் இராமதூதன்” என்றான். பிராட்டிக்கு இப்போது வேண்டுவது இராமனின் அருள். அதன் மூலம்தான் அவள் முயற்சி தடை படும். ஆதலின், அருள் வடிவாக அனுமன் வந்தான். கூசுதல் - அஞ்சுதல். இலங்கைக் கோமானைக் கூச அடர்த்து (தேவாரம் 3 - 1936 - 8) வான்மீகத்தில் தன் சடையைக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றதாகப் பேசப் பெற்றது. தொண்டை - கோவை. ஆதொண்டை - முதல் குறைந்து நின்றது. தொண்டையங் கனிவாய் மென்சொல் சிற்றிடை (வேதாரணிய புராணம் விசுவா - 29)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Aṉumaṉ saw it; he understood what she meant to do;
  2. he was shaken; shrinking from touching her body,
  3. saying "I am the messenger of the grace of the Lord of the gods!",
  4. he bowed to the peahen with lips red as the kovai fruit and appeared before her.

What the poem says

Aṉumaṉ, watching from hiding, sees what Cītai intends and is alarmed. To stop her by force he would have to touch her, which he shrinks from doing.

Instead he steps forward, bows, and announces himself as the messenger of Irāmaṉ's grace. What she needs now is the assurance of Irāmaṉ's love, and his words alone are enough to halt her. The commentary notes that in Vālmīki's version she thinks of hanging herself with her own long braid.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇṭaṉaṉ anumaṉum: karuttum eṇṇiṉāṉ:
koṇṭaṉaṉ tuṇukkam: mey tīṇṭak kūcuvāṉ:
'aṇṭar nāyakaṉ aruḷ tūtaṉ yāṉ! 'eṉā
toṇṭai vāy mayiliṉait toḻutu tōṉṟiṉāṉ.