கம்பராமாயணம் 5300 · சுந்தர 5.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நீ ஈண்டுஇருந்ததை - நீ இங்கே இருப்பதை; இடரின் வைகுறும் - துன்பத்தில் கிடக்கின்ற; ஆண்டகை அறிந்திலன் - இராமபிரான் அறிந்தான் இல்லை; அதற்கு - அறிந்திலன் என்பதற்கு; காரணம் வேண்டுமே ? - காரணத்தைக் கூறவேண்டுமல்லவா; அரக்கர் தம் வருக்கம் - அரக்கர்களின் கூட்டம்; வேரொடு மாண்டில - அடியுடன் அழியவில்லை; ஈது அலால் - இதைத்தவிர; மாறு வேறு - மாறுபட்ட காரணம்; உண்டோ- உள்ளதோ.
அரக்கர்கள்அழியாமையால் இராமன் உன் செய்தியை அறிந்திலன் என்று அறிய வேண்டும். இப்பாடல், அறியாமைக்குக் காரணம் பேசாமல் அறிந்திலன் என்பதற்குக் காரணம் கூறுகிறது. காரணம் என்றது அனுமான உறுப்பாகிய ஏதுவை. புகையாகிய காரணத்தால் நெருப்பை அறிகிறோம். அரக்கர்கள் அழியாத காரணத்தால் அவன் சீதை நிலை அறிந்திலன் என்பதை அறிக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- That you were here, the noble one who lies in sorrow
- has not known; is a reason needed to show it?
- The race of demons has not perished root and all;
- what other sign could there be but this?
What the poem says
Aṉumaṉ reassures Cītai that Irāmaṉ has not abandoned her; he simply has not known where she is. The proof is plain: the demons are still alive. Had he known, they would already have been wiped out root and branch.
The commentary points out the logical form of the argument: as smoke lets us infer fire, the demons' survival lets us infer that Irāmaṉ does not yet know.