கம்பராமாயணம் 5308 · சுந்தர 5.33
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உம்கோன்- உம்தலைவனான இராமபிரான்; செய்யக் குறித்தது - செய்யவேண்டும் என்று நினைத்ததை; குறிப்பின் உன்னி - குறிப்பால் ஆராய்ந்து; வழு இல- குற்றம் இல்லாமல்; செய்தற்கு ஒத்த - செய்வதற்கு உடன்பட்டுள்ள; வானரம் -குரங்குகள்; எழுபதுவெள்ளம் கொண்ட - எழுபது வெள்ளம் என்னும்; எண்ணன - தொகையைப் பெற்றன; உலகம் எல்லாம் - எல்லா உலகங்களையும்; தழுவி நின்று எடுப்ப - அணைத்து நின்று சுமப்பன; வேலை - கடல்களை; தனித்தனி - பிறர் உதவியில்லாமல் தனித்தனியாக; கடக்கும் தாள - தாண்டும் பாதங்களை உடையன; குழுவின - கூடியிருப்பன; வானின் நீண்ட- ஆகாயம் போல் பரவியுள்ளன.
எண்ணன, தாள, என்பன குறிப்பு முற்றுகள் அவை வானரம் என்னும் எழுவாய்க்கு உரியன. செய்தற்கு ஒத்த என்பதை எச்சம் ஆக்காமல் முற்றாக்கியும் கூறலாம். அப்போது ஒத்த என்பது ஒன்றுபட்டிருப்பன என்னும் பொருள் தரும். வெள்ளம் - பேரெண்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Numbering seventy veḷḷams, able to clasp
- and lift up the whole world, with feet that can cross the seas each on its own,
- gathered in hosts, grasping by a mere hint what your lord means to do
- and fit to do it without fault, are the monkeys, spread out vast as the sky.
What the poem says
Aṉumaṉ describes the monkey army at Irāmaṉ's service. It numbers seventy veḷḷams, a veḷḷam being a vast unit of count. Each monkey is strong enough to lift the world and to leap across the sea unaided.
They understand Irāmaṉ's wishes from the slightest hint and carry them out flawlessly, and their massed ranks stretch out like the sky. All this is meant to show Cītai the strength coming to rescue her.