கம்பராமாயணம் 5307 · சுந்தர 5.32

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உம்கோன் - உமதுதலைவனான இராமபிரான்; அம்பு ஒன்றால் - ஒருஅம்பினாலே; அன்னவன் தன்னை - அந்த வாலியின்; ஆவி வாங்கி - உயிரைப் போக்கி; பின்னவற்கு - அவன் தம்பியாகிய சுக்கிரீவனுக்கு; அரசு நல்கி - அரச பதவியை வழங்கி (உன்னைத்தேட); துணை எனப்பிடித்தான்- உதவியாகப் பற்றிக் கொண்ட அவனை; எங்கள் மன்னவன் தனக்கு - எங்கள் அரசனாகிய சுக்கிரீவனுக்கு, நாயேன் - அடியேன்; மந்திரத்து உள்ளேன் - ஆலோசனைச் சபையில் உள்ளேன்; வானின் - ஆகாயத்திலிருந்து தோன்றிய; நல்நெடுங் காலின் மைந்தன் - நல்ல நீண்ட வாயு தேவனின் புதல்வன்; நாமம் - பெயர்; அனுமன் என்பேன் - அனுமன் என்று பேசப்படுவேன்.

வானிலிருந்துகாற்று தோன்றிற்று என்று பேசுவது இந்திய மரபு. ஆதலின் வானின் கால் என்று பேசப்பெற்றது. வான் - மூலப்பிரகிருதி இராமபிரான்பால், “காற்றின் வேந்தற்கு அஞ்சனை வயிற்றின் வந்தேன். நாமமும் அனுமன் என்பேன்” (கம்ப. 376.5.) என்று பேசினான். இராவணனை வென்ற வாலி இராமபிரானின் ஓர் அம்பால் இறந்தான். ஆதலால் இராவணனின் வலிமை கண்டு கலங்க வேண்டா என்பது குறிப்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Your lord took that one's life with a single arrow,
  2. gave the kingdom to the younger brother and held him as an ally; to our
  3. king I, a dog of a servant, am a counsellor; son of the good, far-reaching
  4. wind born of the sky, I am called by the name Aṉumaṉ.

What the poem says

Now the point of praising Vālī becomes clear: Irāmaṉ killed this mighty warrior, who had once humbled Irāvaṇaṉ, with a single arrow. So Cītai need not fear Irāvaṇaṉ's power. Irāmaṉ then made Cukkirīvaṉ king and took him as an ally.

Only now does Aṉumaṉ name himself, humbly: a counsellor to Cukkirīvaṉ, son of the Wind god. In Indian thought wind is born from space, hence 'the wind of the sky'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉavaṉ taṉṉai um kōṉ ampu oṉṟāl āvi vāṅki,
piṉṉavaṟku aracu nalkit tuṇai eṉap piṭittāṉ; eṅkaḷ
maṉṉavaṉ taṉakku nāyēṉ mantirattu uḷḷēṉ, vāṉiṉ
nal neṭuṅ kāliṉ maintaṉ, nāmamum anumaṉ eṉpēṉ.