கம்பராமாயணம் 5310 · சுந்தர 5.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புன்தொழில்அரக்கன் - அற்பத் தொழில்புரியும் இராவணன்; கொண்டு போந்த நாள் - உன்னைக் கவர்ந்து சென்ற காலத்தில்; எம்குன்றின் மருங்கில் - எம்முடைய மலையின் பக்கத்தில்; தூசில் பொதிந்து - ஆடையில் முடிந்து வைத்து; இட்ட - உன்னால் எறியப்பட்ட; அணிகலக் குறியினாலே - ஆபரணங்களின் அடையாளத்தால்; வென்றியான்- வெற்றியே வடிவமான இராமபிரான்; அடியேன் தன்னை - அடியவனானஎன்னை; வேறு இருந்து கொண்டு - தனியாக அமர்ந்து கொண்டு; கூறி - சில அடையாளங்களைச் சொல்லி (என்னை); தென்திசை சேறி என்றான் - நீ தெற்குத் திசைக்குப்போ என்று கூறினான்; அவன் அருள் சிதைவதாமோ - அவனுடைய அருள் பழுதுபடுமா.
பொதிந்து இட்ட அணிகலம் என்க. இராமன் தென்திசை செல்க என்றான். அதனால் உன்னைக் கண்டேன். இதற்கு காரணம் அவன் அருள். அவன் அருளாலே அவன் தாள் வணங்கும் பேறு கிட்டிற்று. செல்-இ-சேறி. முதல் நிலை திரிந்த தொழிற்பெயர் பிராட்டி அணிகளைப்பொதிந்து இட்டது, கலங்காண்படலத்தில் 'இழை பொதிந்து இட்டனள்' (கம்ப. 3903) என்று கூறப்பெற்றது. 'சீதையை.... அரக்கன் வவ்விய ஞான்றை, நிலம் சேர் மதரணி கண்ட குரங்கின்' என்று புறப்பாட்டு விளம்பிற்று (புறம் 378) பிராட்டி தென்திசையில் உள்ளாள் என்பதை அணிகலன் காண்பித்தது. புன்மை புரிதலைத் தொழிலாகப் பெற்றவன் இராவணன் என்க. 'யான் இழைத்திட இல் இழந்து இன்னுயிர் சுமக்கும் மானுடன்' (கம்ப. 6179) என்று அவன் பேசியதை உலகம் அறியும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On the day the demon of base deeds carried you off, the jewels you wrapped
- in cloth and dropped beside our hill gave the sign;
- by it the victorious one took me, his servant, aside, sat and told me things,
- and said, "Go to the southern quarter!" Can his grace ever fail?
What the poem says
Aṉumaṉ recalls how the search was directed. When Irāvaṇaṉ carried Cītai off through the sky, she wrapped some of her jewels in a cloth and dropped them near the monkeys' hill. From those jewels Irāmaṉ knew she had been taken south.
So he took Aṉumaṉ aside, gave him private signs, and sent him southward. Finding her is the fruit of Irāmaṉ's grace, which never fails. The commentary notes that an ancient Puṟanāṉūṟu poem already alludes to the monkeys who found Cītai's scattered jewels.