கம்பராமாயணம் 5311 · சுந்தர 5.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்னாய் - தாயே; கொற்றவற்கு - இராமபிரானுக்கு, ஆண்டு - கிட்கிந்தையில்; காட்டி - (நீ இட்ட அணிகளை) காண்பித்து; கொடுத்தபோது - (யாங்கள்) பெருமானிடம் வழங்கிய போது; அடுத்த தன்மை - (இராமனைச்) சார்ந்த மெய்ப்பாட்டை; பெற்றியின் - யான் கூறும் இயல்பாலே; உணர்தற் பாற்றோ - அறிந்து கொள்ளும் எளிமையானதோ; உயிர்நிலை - உயிரை நிலையில் வைக்க (அணிகள் தவிர); பிறிதும் - மற்றொரு பொருளும்; உண்டோ - உள்ளதா; அன்று - (இராவணன் உன்னை) கவர்ந்து சென்ற அன்று; நீ இழித்து நீத்த - நீ கழற்றிப் போட்ட; மற்றை நல் அணிகள் - நல்ல பிற ஆபரணங்கள்; இற்றை நாள் அளவும் - இன்று வரை; உன் மங்கலம் - உன்னுடைய மங்கலநாணை; காத்த காண் - பாதுகாத்தன, அறிவாயாக.
உலகில் மங்கலநாண் மற்றைய அணிகலன்களைப் பாதுகாக்கும் இங்கு மற்றைய அணிகலன்கள் மங்கல நாணைப் பாதுகாத்தன. பெருமான் அணிகலன்களைக் கண்டபோது அடைந்த மெய்ப்பாட்டைக் கூறி, முற்றும் கூற இயலாதபடியாலே யாது செப்புகேன் என்றார் கவிச்சக்கரவர்த்தி. அதுவே, 'உணர்தற்பாற்றோ' என்று பேசப்பெற்றது. மங்கலம், என்றது மங்கல நாணை. மங்கலக் கழுத்துக்கெல்லாம்... அணி' என்று முன்பு பேசப்பெற்றது. (கம்ப. 1123.) காண், மன், ஓ, அசைகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When we showed them there to the conqueror and handed them over, what came over him,
- can it be grasped by any telling? Was there anything else to keep him alive
- up to this day? Mother, those other fine jewels
- that you took off and cast away that day, see, have guarded your wedding thread.
What the poem says
Aṉumaṉ tells Cītai what happened when the monkeys gave her jewels to Irāmaṉ in Kiṭkintai. His emotion was beyond any description, and those jewels have been the only thing keeping him alive ever since.
So the ornaments she threw away have protected her tāli, the sacred wedding thread, by keeping her husband alive. The commentary notes the reversal: normally a wife's tāli is what guards her other jewels, since a widow lays them aside; here the other jewels have guarded the tāli.