கம்பராமாயணம் 5314 · சுந்தர 5.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
துடி இடை ! - உடுக்குப்போலும் இடையுடையவளே; படிவம் - இராமபிரானின் திருமேனி; படி உரைத்து - உவமானத்தைக் கூறி; எடுத்துக்காட்டும் - (பொதுத்தன்மையை) விளக்கிக்கூறும் (அளவுக்கு); படித்து அன்று - (எளிய) இயல்புடையதன்று; உவமம் எல்லாம் - எல்லா உவமைக்கும்; பண்பின் - பொதுத்தன்மையாகிய பண்பில்; முடிவு உள - எல்லைகள் உள்ளன; முன்னர் இலக்கணம் ஒழியும் - முற்பட்டு இலக்கணத்தால் நிரம்பாது நீங்கும்; (உவமையை நோக்காமல்) அடையாளத்தின் - யான்கூறும் அடையாளங்களின்; தொடர்வையே - தொடர்ச்சியையே; தொடர்தி - பின்பற்றி உணர்க; என்னா - என்று; அடிமுதல் - திருவடி முதல்; முடியின்காறும் - திருமுடி முடிய; அறிவுற - அறிந்து கொள்ளும்படி; அனுமன் சொல்வான் - அனுமன் கூறத் தொடங்கினான்.
பத்து மதியிருந்தால்தான் விரல் நகத்துக்கு ஒப்பாம் என்றான். மதி ஒன்றே; விரல் நகம் பத்து. இங்ஙனம் உவமை அளவுபடுதலைப் பேசினான். இதுவே உவமைக்கெல்லாம் முடிவுள என்று கூறப் பெற்றது. பிறவும் இப்படியே கருதுக. பெருமான் அழகு என்னால் சொல்லப்படாது. சொன்னது கொண்டு தேவரீர் அறிந்தபடி அளவிட்டுக் கொள்ளும் என்பது பழையவுரை (அடை - பதி)
ஆங்கிலம் · English translationAI
Translation
- "His form is not of a kind that can be shown by naming likenesses; every simile
- has limits to the qualities it shares, and falls short of the mark;
- lady with a waist like a drum, follow only the run of the signs I give!" he said,
- and from his feet to his crown, so that she would know him, Aṉumaṉ spoke.
What the poem says
Aṉumaṉ warns Cītai before he begins: Irāmaṉ's form cannot really be captured by comparisons, because every simile matches only up to a point and then falls short.
So she should not rely on the likenesses he offers but follow the details as signs by which she will recognise him. He then describes Irāmaṉ from feet to crown, the traditional order for describing a deity. An old commentary puts it: his beauty cannot be told; from what I say, measure it by what you yourself know.