கம்பராமாயணம் 5315 · சுந்தர 5.40

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(ஐயன் திருவடி) சேயிதழ் தாமரைஎன்று -சிவந்த இதழ்களைப் பெற்ற தாமரை மலர் என்று; சேண் உளோர் - தூரத்திலிருப்பவர் (திருவடியைப் பாராதவர்); ஏயினர் - ஒப்பிட்டுப் பேசினர்; அதன் துணை - அத்தாமரை அளவுக்கு; எளியது இல்லை - எளிமை உடையது அன்று; நாயகன் - இராமபிரான்; திருவடி குறித்து - திருவடியை எண்ணி (அதற்கேற்ப); நாட்டுறின்- உவமையைக் கூறத் தொடங்கினால், பாய்திரை - பரவிய அலையுடன் கூடிய கடலில் உள்ள; பவளமும் - பவளம் கூட; குவளைப் பண்பிற்றாம் - குவளையின் பண்பை உடையதாம்.

சேண் உளோர் -தூரத்திலிருப்பவர் (பாதத்தைப் பாராதவர்) தனித்திருக்கும்போது சிவந்துள்ள பவளம் இராமபிரான் திருவடி அணுகும்போது குவளைபோல் கரியநிறம் பெறும். குவளைப் பண்பினாம் - எனப்பாடங்கொண்டு தாமரையைத் திருவடிக்கு உவமையாக்குவது பவளத்திற்குக் குவளையை உவமை கூறியதற்கு ஒப்பாம் என்று பொருள். பாதாதி கேசவர்ணனை மேற்கொள்ளப்பட்டது. இராமன் பரம் பொருள் என்பது குறிப்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those far away have likened them to the red-petalled lotus;
  2. but they are nothing so slight as that;
  3. if one sets out to find a match with the lord's sacred feet in mind,
  4. even the coral of the surging sea takes on the nature of the dark blue lily.

What the poem says

Aṉumaṉ begins with Irāmaṉ's feet. Poets who have never seen them up close compare them to red lotuses, but that falls far short.

Even red coral from the sea, set beside those feet, would look as dull and dark as a blue water lily, so much redder and brighter are they. The commentary notes that the description runs from feet to head, as is done for a god, hinting that Irāmaṉ is the Supreme Being.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cēyitaḻt tāmarai eṉṟu cēṇ uḷōr
ēyiṉar; ataṉtuṇai eḷiyatu illaiyāl
nāyakaṉ tiruvaṭi kuṟittu nāṭṭuṟiṉ
pāy tiraip pavaḻamum kuvaḷaip paṇpiṟṟāl.