கம்பராமாயணம் 5317 · சுந்தர 5.42

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உகிர்க்கு - எம்பெருமான் விரல் நகத்துக்கு; திங்கள் - சந்திரன்; சிறியவும் பெரியவும் ஆக - சிறிய வடிவத்தையும் பெரிய வடிவத்தையும் உடையதாய்; மறுவில - களங்கமில்லாதவையாய்; பத்து உள வல்ல - பத்து இல்லை; சுடர் எறி - ஒளியை வீசும், வயிரம் - வயிரங்கள்; திரட்சி எய்தில - உருட்சியைப் பெறவில்லை; (ஆதலால்) யான் இனி - யான் மேலும்; உவமம் ஆவன - உவமமாகப் பொருந்தக் கூடியனவற்றை; அறிகிலேன் - சிந்திக்கும் ஆற்றல் உடையேன் அல்லன்.

சந்திரன், சிறிய வடிவத்தையும், பெரியவடிவத்தையும் பெற்றதாய்ப் பத்து இல்லை. வயிரங்கள் திரட்சியைப் பெறவில்லை. பலவாக இல்லாததால் திங்களும் திரட்சி எய்தாமையால் வயிரமும் உவமையாகும் பேற்றை இழந்தன. உவமம் - ஒப்பு. மற்று - அசை. திங்களோ வயிரமோ - “ஓ” அசை நிலை. திருவே கொலோ (சிந்தா 639) என்பதில் உள்ள ஓகாரம் அசை என்றார் இனியர் அறிகிலேன் இதில் உள்ள இல் ஆற்றல் உணர்த்தும் இடைச்சொல் ஆழ்வார் ஐம்புலன் வெல்லகில்லேன் என்றார் (திருவாய் 4-7-9)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Moons, some small and some large,
  2. spotless, there are not ten of them; and then
  3. the diamonds that throw out light have not gained roundness;
  4. I cannot tell what could serve as a likeness for his nails.

What the poem says

Next come Irāmaṉ's toenails. The moon might seem a fitting likeness for their bright, curved shape, but there are ten nails, of different sizes, and only one moon, and that one spotted.

Shining diamonds might do, but they lack the smooth roundness of the nails. So Aṉumaṉ confesses he can find no fitting comparison at all. This illustrates his earlier warning that every simile has its limits.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ciṟiyavum periyavum ākit tiṅkēḷā
maṟu ila pattu uḷa alla maṟṟu iṉi
eṟi cuṭar vayiramō tiraṭci eytila
aṟikileṉ ukirkku yāṉ uvamam āvaṉa.