கம்பராமாயணம் 5332 · சுந்தர 5.57
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இரு நால் பகலின்- எட்டாவது நாளில்; இலங்கும் மதி - விளங்கும் மதியானது; வருநாள் தோன்றும் - வளர்ந்து வரும்நாட்களில்வெளிப்படையாகத் தெரியும்; தனி மறுவும் - தனியாகவுள்ள களங்கமும்; வளர்வும் தேய்வும் - வளர்தலும் தேய்தலும்; வாள் அரவம் - கொடிய பாம்பால்; ஒருநாள் கவ்வும் - ஒரு நாள் கவ்வப்படும்; உறுகோளும் - மிக்க துன்பமும்; இறப்பும் பிறப்பும் - அழிதலும் தோன்றுதலும்; ஒழிவுற்றால் - நீங்கப் பெற்றால்; அலங்கல் இருளின் - அசைகின்ற இருளின்; எழில் நிழற் கீழ் - அழகிய நிழலுக்குக் கீழே; பெருநாள் நிற்பின் - நீண்ட நாட்கள் நின்றால் (அது); அவன் - இராமபிரானுடைய; நெற்றிப் பெற்றித்து ஆக பெறும் - நெற்றியின் தன்மை உடையதாகக் கருதப்பெறும்.
மதி, ஒழிவுற்றால், நிற்பின், பெற்றித்து, ஆகப் பெறும் என்று கூட்டுக. அசையும் இருள் என்றது பெருமானின் நெற்றியின்பால் அசையும் அளகத்தை. அளகம் - முன் நெற்றி மயிர் இருள் உவம ஆகுபெயராய் இருள் போன்ற தலை உரோமத் தொகுதியை உணர்த்திற்று. இருண்ட குழற்கற்றையின் கீழ் விளங்கும் பெருமான் நெற்றிக்கு இருளின் கீழ் ஒளிரும் பிறை ஒன்று இருக்குமாயின் ஒப்பாகும் என்றவாறு (அண்ணாமலை பதிப்பு)
ஆங்கிலம் · English translationAI
Translation
- If the lone spot that shows in the coming days, the waxing and the waning, the grip
- by which the cruel serpent seizes it one day, and its dying and being born were all done away with,
- then the moon that shines on the eighth day, if it stood for long ages
- beneath the lovely shade of swaying darkness, might gain the nature of his forehead.
What the poem says
For Irāmaṉ's forehead the natural likeness is the half-moon of the eighth day. But the moon has its flaws: the dark spot, its waxing and waning, being swallowed in eclipse by the serpent, its monthly death and rebirth.
Only if the half-moon were rid of all these and stood for ever under a lovely, moving darkness, that is, under the dark locks falling over his brow, could it resemble his forehead.