கம்பராமாயணம் 5337 · சுந்தர 5.62

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நீண்ட முடி வேந்தன் அருள் ஏந்தி நிறைசெல்வம்
பூண்டு அதனை நீங்கி நெறி போதல் உறு நாளின்
ஆண்டு அந் நகர் ஆரையொடு வாயில் அகலாமுன்
'யாண்டையது கான்? 'என இசைத்ததும் இசைப்பாய்.

பொருள் · Meaning in Tamil

நீண்டமுடிவேந்தன் - நீண்ட முடிதரித்ததசரதச் சக்கரவர்த்தியின்; அருள் ஏந்தி - கட்டளையை ஏற்று; நிறை செல்வம் பூண்டு - அரசச் செல்வத்தை ஏற்றுக் கொண்டு; அதனை நீங்கி - அரசாட்சியை விட்டுவிலகி; நெறி போதலுறும் நாளின் - வழியிலே போகும் நாளிலே; ஆண்ட நகர்- முன்னோர்கள் ஆட்சி புரிந்த அயோத்தியில்; ஆரையொடு வாயில் அகலா முன் - மதிலுடன் கூடிய வாயில் கடப்பதற்கு முன்; கான் யாண்டையது என - காடு எங்கே உள்ளது என்று; இசைத்ததும் - பிராட்டி வினவியதையும்; இசைப்பாய் - (அனுமானே) கூறுவாயாக.

முடியை, நீள்முடி, என்றும் நெடுமுடி என்றும் கூறுவது கவிச் சக்கரவர்த்தியின் இயல்பு. மதில் மணிக்கடை கடந்திடுமுன்.... வெங்கானம் யாதோ ? எனச் சொல்லினாள்... சொல்லுவாய் என்று நாட விட்ட படலம் (கம்ப. 4518) கூறும். இது சிலம்பிலிருந்து கவிச்சக்கரவர்த்தி யறிந்தது. பத்தினித் தெய்வம் “மதுரை மூதூர் யாது” என வினவ, (சிலம்பு நாடு காண் 4/) இதுவே புகழேந்தி நளனின் மக்கள் மொழியாகப் பேசியது நன்று - குழந்தைகள் “வழியானது எல்லாம் கடந்தோமோ” என்று வினவும். ஆரை - மதில். வண்கிடங்கு சூழும் ஆரை வைசயந்த நகரிலே, என்பர் நிரம்ப அழகிய தேசிகர் (சேது புராணம் சீதை. 5.)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On the day I took up the command of the king with the tall crown, accepted the full wealth of the kingdom,
  2. and then left it to set out on the road,
  3. before we had passed the gate with its wall in the city we had ruled,
  4. she asked, "Where is the forest?": tell her that too.

What the poem says

The second token in Irāmaṉ's words. On the day he gave up the throne at his father's bidding and set out for exile, they had not even passed through the city gate when Cītai, who had never walked any distance before, asked, 'Where is the forest?'

The commentary traces this touching detail to the Cilappatikāram, where Kaṇṇaki, just setting out on the long journey, asks how far Maturai is, and notes that Pukaḻēnti used a similar touch for Naḷaṉ's children.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīṇṭa muṭi vēntaṉ aruḷ ēnti niṟai celvam
pūṇṭu ataṉai nīṅki neṟi pōtaluṟu nāḷiṉ
āṇṭa nakar āraiyoṭu vāyil akalāmuṉ
'yāṇṭaiyatu kāṉ? 'eṉa icaittatum icaippāy.