கம்பராமாயணம் 534 · பால 9.68
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஓடை - (அந்த நாட்டிலுள்ள) நீரோடைகள்; இழைக்கும் நுண் இடை - (பஞ்சின் நூலைக் காட்டிலும் நுட்பமான இடையானது; இடைதர - (சுமையைப் பொறுக்கமாட்டாமல் மெலிந்து) பின்வாங்குமாறு; முகடு உயர் கொங்கை - மலைச்சிகரம்போல் ஓங்கியுள்ள தனங்களையும்; மழைக்கண் - மழைத்துளிபோல் குளிர்ந்த கண்பார்வையையும் உடைய; மங்கையர் - இளம் பெண்கள்; அரங்கினில் - (நடனம் ஆடுகின்ற) நாடக சாலையிலே; வயிரியர் முழவம் முழக்கும் - தம்மோடு இருக்கும் பாடகர்கள் மத்தளத்தை முழக்குவதனால் உண்டாகிய; இன் இசை வெருவிய - இனிமையான ஓசையைக் கேட்டு அஞ்சி ஓடுகிற, மோடு இள மூரி - பெரிய இளமையான எருமைகள்; உழக்க - (படிந்து) கலக்குவதால்; வாளைகள் பாளையில் குதிப்பன - (அதற்கு அஞ்சி) வாளை மீன்கள் பக்கங்களிலுள்ள (தென்னை, கழுகுகளின் பாளைகளில் மேல் தாவிப் பாயப் பெறுவன. நடன அரங்கில் மங்கையர் ஆடும்போது வயிரியர் மத்தளம் கொட்டுகிறார்கள்; அதைக் கேட்டு அஞ்சிய எருமைகள் ஓடிச்சென்று ஓடைகளில் பாய்ந்து நீரைக் கலக்குகின்றன. அதனால் அங்குள்ள வாளைகள் பாளைகளில் பாய்கின்றன. வயிரியர்: மத்தளம் கொட்டுபவர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the waist, finer than spun thread, gives way beneath breasts lofty as peaks,
- the young women with rain-cool eyes dance; on the stage the drummers sound the drum;
- frightened by that sweet music, the big young buffaloes plunge in and churn the water,
- and the vāḷai fish leap up into the palm spathes — such are the streams.
What the poem says
A chain of cause and effect. Young women dance in a hall while the drummers play. The sound frightens the buffaloes, which stampede into the streams and churn up the water. The startled vāḷai fish leap clean out of the water into the flower-spathes of the coconut and areca palms on the banks. The dancers' waists are so slender they seem to give way under the weight of their breasts, a standard image of feminine beauty in Tamil poetry.