கம்பராமாயணம் 533 · பால 9.67
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நதிகள் - (மிதிலை நாட்டு) ஆறுகளில்; முறையினில் - ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாக; முது மேதியின் முலைவழி பாலும் - முதிய எருமைகளின் மடிகளில் இருந்து பெருகின்ற பாலும்; துறையிலே நின்று - கரைகளிலே நிறைபெற்று; உயர் மாங்கனி - ஓங்கி வளர்ந்துள்ள மாமரங்களின் பழங்களிலிருந்து; தூங்கிய சாறும் - வழியும் சாறும்; அறையும் மென் கரும்பு - வெட்டப்பட்ட இனிய சுவையான கரும்புகளை; ஆட்டிய அமுதமும் - (ஆலையில் வைத்து) ஆட்டுவதால் பெருகும் அமுதம் போன்ற இனிய பாலும் (கரும்புப் பால்); அழிதேன் நறையும் - தேன் கூடுகள் சிதைவதால் சிந்திப் பெருகும் மணமுள்ள தேனும்; அல்லது - (என்னும் இவை மாறி மாறிப் பெருகுவதேயல்லாமல்) இவையல்லாமல்; நளிர்புனல் பெருகலா - குளிர்ந்த நீர் பெருக இடம் பெறாதன.
நதி வளம்: நதிகளை வருணிக்குங்கால் தாமாகப் பால் சுரக்கின்ற எருமை வளம், மாமரச் சோலை வளம், கரும்புக் குவியல், தேன் பெருக்கம் ஆகியவற்றைக் கூறி நாட்டு வளத்தையும் புலப்படுத்தினார். முதுமேதி: பருவம் நிரம்பிக் கன்றை ஈன்ற எருமை. மேற்கோள் 'கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்று பால் சோர' - திருப்பாவை -12
ஆங்கிலம் · English translationAI
Translation
- Milk flowing in turn from the udders of old buffaloes,
- juice dripping from tall mango trees standing on the banks,
- nectar pressed from soft cut sugarcane, and, from broken combs,
- fragrant honey — with these, and never with cool water, do the rivers swell.
What the poem says
The rivers of Mitilai are so rich that they seem to run with anything but water. Milk streams on its own from the udders of mother buffaloes, juice drips from the mangoes on the banks, sugarcane juice flows from the presses, and honey runs from broken hives. In describing the rivers Kampaṉ shows the wealth of the whole land. The commentary compares a line of Āṇṭāḷ's Tiruppāvai (verse 12), where buffaloes yearning for their calves let their milk flow unbidden.