கம்பராமாயணம் 532 · பால 9.66
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(அம் மிதிலை நாட்டிலுள்ள) நீர்நிலைகளில்; தூவி அன்னம் நடை கண்டு - சிறகுகளையுடைய அன்னங்கள் (மகளிரின் நடையழகைப் பார்த்து; தம் இனம் என்று தொடரும் - தன் இனமான அன்னப் பறவை என்று மயங்கி (அவற் பின் தொடர்ந்தன; கூவும் மென்குயில் குதலையர் - (இனிமையாகக்) கூவுகின்ற மென்மையான குயிலின் குரல்போன்ற மழலைச் சொற்களையுடைய மகளிர்; குடைந்த - மூழ்கி விளையாடின; தண்புனல் வாய் - குளிர்ந்த நீரில்; ஓவு இல் - விட்டு நீங்காத; குங்குமம் சுவடு உற - குங்குமக் குழம்பின் சுவடுகள் (தம்மேல்) பொருந்தியதால்; ஒன்றோடு ஒன்று ஊடி - ஒன்றுடன் ஒன்று பிணங்கி; பூ உறங்கினும் - (தண்ணீரிலுள்ள தாமரை முதலிய) மலர்கள் உறங்கினாலும்; புள் உறங்காதன - (அவற்றிலுள்ள) பறவைகள் தூங்காமல் கிடக்கின்றன.
மயக்க அணி: குளங்களில் பெண்கள் இறங்கி விளையாடுகின்றார்கள். அப்பொழுது, அவர்கள் உடம்பில் அணிந்துள்ள குங்குமக் கலவை அக்குளங்களிலுள்ள பறவைகளின் உடல்மேல் படிகிறது. அந்நிலையில் பிற பறவைகள் ஒன்றை ஒன்று நோக்கும்போது தம் இனப் பறவைகளையே பிற இனப்பறவைகளென மயங்கி தம்முள் மாறுபடுகின்றன. கலவிக் குறி: நிறம் வேறுபடுதலும் நன்மணம் உறுதலும். பூவிக்குத் தூக்கம்: இதழ்குவிதல். பறவைக்குத் தூக்கம்: கலவியன்றி இளைப்புத் தீரத் தூங்குதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The feathered swans, seeing the women's gait and taking them for their own kind, follow them;
- and in the cool water where those soft-cooing, koel-voiced, lisping women bathed,
- the birds, marked with kumkum that will not wash away, quarrel one with another,
- and though the flowers sleep, the birds do not — such are the ponds.
What the poem says
The swans of Mitilai follow the women, thinking from their graceful walk that they are swans too. When the women bathe, the saffron kumkum paste on their bodies washes off onto the water-birds. Then the birds no longer know their own mates. Seeing the coloured, perfumed marks, each suspects the other of a lover, and they quarrel all night. The lotuses close their petals and "sleep," but the birds stay awake.