கம்பராமாயணம் 531 · பால 9.65

Section பால காண்டம் / 9. அகலிகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பட்ட வாள் நுதல் மடந்தையர் பார்ப்பு எனும் தூதால்
எட்ட ஆதரித்து உழல்பவர் இதயங்கள் வெறுப்ப,
வட்ட நாள் மரை மலரின் மேல் வயல் இடை மள்ளர்
கட்ட காவி, அம் கண் கடை காட்டுவ கழனி.

பொருள் · Meaning in Tamil

கழனி - (அந் நாட்டு) வயல்களில், பார்ப்பு எனும் தூதால்- தங்கள் பார்வையாகிய தூதால், எட்ட ஆதரித்து - (தம் கணவரைச் சேர்வதற்கு விரும்பி; உழல்பவர் - சஞ்சரித்துத் திரிபவராகிய; பட்டம் - நீர்நிலையிலுள்ள; வாள்நுதல் - ஒளிபொருந்திய நெற்றியையுடைய; மடந்தையர் இதயங்கள் - உழவ மகளிரின் மனம்; கொதிப்ப - வெறுப்பு அடையுமாறு; வயலிடை மள்ளர் - வயல்களிலே உழவர்கள்; வட்ட நாள்மரை மலரின் மேல் - வட்ட வடிவமான புதிய தாமரை மலர்களின்மேல்; கட்ட காவி - களை பறித்தெறிந்த கருங்குவளை மலர்களாகிய; அம்கண் கடை - அழகிய கடைக்கண்களை; காட்டுவ - வெளிப்படுத்துகின்றன.

வேறு உரை: உழத்தியரின் பார்வைத் தூதால் மயங்கி அவர்களைச் சேர விரும்பும் ஆடவர் மனம் வெறுக்குமாறு வயல்களில் புதிய தாமரை மலர்களின்மேல் அம்மகளிர் களைந்து எறிந்த குவளை மலர்கள் (பெண்களின்) கண்களின் கடைப் பகுதிகளைக் காட்டுகின்றன. ஆடவர் வெறுப்புக்குக் காரணம்: தாமரை மலரில் பொருந்திய குவளைப் பூக்களை நோக்கித் தம்மைக் குறிப்பினால் கண் காட்டி அழைக்கின்ற முகமென மயங்கி அவற்றின் அருகில் வந்த ஆடவர்கள் உண்மையறிந்து வெறுத்தனர். மயக்க அணி: தமது குளிர்ந்த கண் பார்வையால் உழவரைத் தம் வசப்படுத்தித் தழுவ வந்த உழத்தியர் அவ்வயலெங்கும் தாமரைமேல் கருங்குவளைமலர் படிந்திருப்பதைக் கண்டு, தமக்கு முன்னரே அந்த உழவர்களைக் கவர்வதற்கு வேறுசில மகளிர் அவர்களைக் கண்களால் நோக்குகின்றார்களென மயங்கினார்கள்: இனி தமது எண்ணம் கை கூடுமோ கூடாதோ என்ற ஐயத்தின் மிகுதியால் மனம் வெறுத்தனர் எனக் கொள்ளலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that the bright-browed women of the pools, who roam longing to reach their men
  2. through the envoy of their glances, burn in their hearts,
  3. on the round fresh lotus blooms the dark lilies the field-hands have pulled out as weeds
  4. show the corners of lovely eyes — such are the fields.

What the poem says

Another scene from the fields of Mitilai. The labourers pull out blue lilies as weeds and throw them down, and they land on the round lotus flowers. A lotus with blue lilies lying on it looks like a woman's face casting sidelong glances.

The commentary reads the conceit two ways. The farm-women, who were trying to win their husbands with glances, think rival women are making eyes at the same men and grow jealous. Or the men, drawn toward what looked like an inviting face, find only flowers and turn away annoyed. Either way it is the figure of delusion again.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṭṭa vāḷ nutal maṭantaiyar pārppu eṉum tūtāl
eṭṭa ātarittu uḻalpavar itayaṅkaḷ kotippa,
vaṭṭa nāḷ marai malariṉmēl vayaliṭai maḷḷar
kaṭṭa kāvi, am kaṇkaṭai kāṭṭuva kaḻaṉi.