கம்பராமாயணம் 5346 · சுந்தர 5.71
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(திருவாழிபெற்றமையால்) உயிர் ஏமுற - உயிரினம்மகிழ்ச்சி பெருக (அதனாலே); விளங்கும் - பொலிவுறுகின்ற; முத்த நகையாள் - முத்தை ஒத்த பற்களை உடைய பிராட்டி; இத்தகையள் ஆகி - இப்படிப்பட்ட மெய்ப்பாடு உடையவளாய்; விழியின்ஆலி - கண்களில் வழியும் நீர்த்துளிகள்; முலை முன்றில் - தனங்களின்மேற்பரப்பில், தத்தி உக - பட்டுத் தெறித்துச் சிதறவும்; மென் குதலை தள்ள- மெல்லிய மழலைச் சொற்கள் தடுமாறவும்; (பூரித்து) உத்தம ! - மேலானவனே (நீ); உயிர் தந்தாய் - என் உயிரை வழங்கினாய்; எனா - என்று (புகழ்ந்து); இனைய வாசகம் - இந்த மொழிகளை; உரைத்தாள் - கூறினாள்.
அகத்தின்மகிழ்ச்சி பிராட்டியின் பற்களில் விளங்கிற்று. முலை முன்றில் - மார்பின் மேற்பரப்பு. ஏந்து முலை முற்றம் (அகம் 51) ஆலி - நீர்த்துளி. இங்கு கண்ணீரைக் குறிக்கிறது. தன்னை வருத்தியும் பிறருக்கு உதவுபவன் உத்தமன் (திருப்பாவை - ஓங்கி உலகளந்த - உரை) வாசகம் பொருள் பொதிந்த சொல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Being thus, she of the pearly smile, radiant with her life's delight,
- her tears dropping and scattering on the courtyard of her breast,
- her soft words stumbling, said, "You have given me life,
- O best of men!" and spoke these words.
What the poem says
Cītai, radiant with joy, her smile shining like pearls, weeps tears that splash onto her breast. Her voice trembles and falters like a child's as she tells Aṉumaṉ that he has given her back her life, calling him uttamaṉ, the best of men.
The commentary notes that an uttamaṉ is one who helps others even at cost to himself. The following verse gives her words.