கம்பராமாயணம் 5349 · சுந்தர 5.74
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(பிராட்டி) மீண்டு உரைவிளம்பலுற்றாள் - மறுபடியும் பேசத்தொடங்கி; (அனுமனை நோக்கி) விழுமிய குணத்தோய் - சிறந்த குணங்களைப் பெற்ற அனுமனே; வீரன் - இராமபிரான்; இளவலோடும் யாண்டையான் - இளைய பெருமாளுடன் எங்கே உள்ளான் (இராமபிரான்); உன்னை எவ்வழி எய்திற்று - உன்னை எவ்விடத்தில் சந்தித்தது; ஆண் தகை- இராமபிரான்; அடியேன் தன்மை - என்னுடைய நிலையை, யார் சொல அறிந்தது - எவர் கூற அறிந்தது; என்றாள் - என்று வினவினாள் (அதுகேட்ட), திரள் தூண் - திரண்ட தூண் போன்ற, தடந்தோளான் - அகன்ற தோளை உடைய அனுமனும்; உற்றது சொல்லல் உற்றான் - நிகழ்ந்ததைக் கூறத் தொடங்கினான்.
காதல் மகளிர்தம்மை “அடிச்சி” என்று கூறிக் கொள்வதைப் பிரபந்தத்தில் காண்கிறோம். “தாமரைக் கையை.... அடிச்சியேம் தலை மிசை அணி” என்று சடகோபநாயகி பேசினாள் (திருவாய் 10.3.5) அதை அறிந்த பிராட்டி தன்னை “அடியேன்” என்றாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She began to speak again: "You of noble virtues! Where is the hero
- with his younger brother? In what way did he come upon you?
- From whose telling did that noble man learn of the state of me, his servant?" she asked;
- and he of the broad shoulders like rounded pillars began to tell what had happened.
What the poem says
Cītai now asks for news. Where are Irāmaṉ and Ilakkuvaṉ? How did Irāmaṉ come to meet Aṉumaṉ? And who told Irāmaṉ what had become of her?
She speaks of herself as Irāmaṉ's servant (aṭiyēṉ), which the commentary links to the way loving heroines in the devotional hymns call themselves the Lord's handmaids. Aṉumaṉ begins to tell the whole story.