கம்பராமாயணம் 5355 · சுந்தர 5.80

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சுந்தரி - குண அழகுபெற்றவளே; வந்து - சடாயுவின் பக்கத்தே வந்து(இராமபிரான்); அவன் மேனி நோக்கி - சடாயுவின் (போர்க்காயம் பெற்ற) திருமேனியைப் பார்த்து; வான் உயர் துயரின் வைகி - மிகப் பெரிய துன்பத்தில் ஆழ்ந்து; எந்தை - என்னுடைய தந்தையே; நீ உற்ற தன்மை - நீதுன்பமடைந்த காரணத்தை, இயம்பு என - கூறுக என்று சொல்ல (சடாயு); இலங்கை வேந்தன் - இலங்கை அரசனான இராவணன்; நின்னைச் செய்த - உனக்குச் செய்த; வஞ்சனை சொல்ல சொல்ல - வஞ்சகத்தை ஒவ்வொன்றாக எடுத்துக் கூறுந்தொறும் கூறுந் தொறும், சீற்ற வெந் தீ - இராமபிரானின்கோபமாகிய கொடிய நெருப்பு; உலகம் வெந்தன என்ன - உலகம் வெந்துபோயின என்று கூறும்படி, நிமிர்ந்தது - படிப்படியாக வளர்ந்தது.

நின்னைச் செய்த- நினக்குச் செய்த - உருபு மயக்கம். சொல்லச் சொல்ல, சீற்றவெந்தீ நிமிர்ந்தது என முடிக்க. சொல்லும் தோறும் சொல்லும் தோறும் சீற்றத் தீ படிப்படியாக வளர்ந்தது. சொல்லச் சொல்ல பொருளொடு புணர்ந்த அடுக்கு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He came, looked at his body, sank into grief as high as the sky,
  2. and said, "My father, tell me what has befallen you!"; and as he told,
  3. lovely one, the treachery the king of Ilaṅkai worked on you, more and more,
  4. the fierce fire of his anger rose till it seemed the worlds were burnt.

What the poem says

Irāmaṉ found Caṭāyu lying wounded from his fight with Irāvaṇaṉ. Overcome with grief, he called the old bird 'father' and asked what had happened.

As Caṭāyu told, step by step, how the king of Ilaṅkai had tricked and carried off Cītai, Irāmaṉ's anger blazed higher and higher, until it seemed the whole world might burn. The repeated 'as he told, as he told' captures the rising fury.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vantu avaṉ mēṉi nōkki, vāṉ uyar tuyariṉ vaiki,
'entai! nī uṟṟa taṉmai iyampu! 'eṉa, ilaṅkai vēntaṉ,
cuntari! niṉṉaic ceyta vañcaṉai collac colla,
ventaṉa ulakam eṉṉa, nimirntatu cīṟṟa ven tī.