கம்பராமாயணம் 5354 · சுந்தர 5.79
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அன்னை - தாயே; அந்நிலை ஆய அண்ணல் - அப்படிப்பட்ட நிலையை அடைந்த இராமபிரான்; ஆண்டு நின்று - அந்தப் பர்ணசாலையிலிருந்து; நின்னை - உன்னை; துன் அருங்கானும் - நெருங்கிய பெரிய காடுகளையும்; யாறும் மலைகளும் - ஆறுகளையும் மலைகளையும்; தொடர்ந்து நாடி - நெருங்கித் தேடிப் பார்த்து; (அங்கெல்லாம் உன்னைக் காணாமையால்) இன் உயிர் இன்றி - இனிய உயிர் இல்லாமல்; ஏகும் - செல்கின்ற; இயந்திரப்படிவம் ஒப்பான் - எந்திரப் பாவையை ஒத்தவனாய்; தன் உயிர் - தன்னுடைய உயிரை; புகழ்க்கு விற்ற சடாயுவை - புகழின் பொருட்டாக வழங்கிய சடாயுவை, வந்து சார்ந்தான் - வந்து அணுகினான்.
இயந்திரத்துக்குஉயிர் இல்லை. பெருமானும் அப்படியிருந்தான். “புகழ் எனில் உயிரும் கொடுக்குவர்” என்று சங்க நூல் பேசும். அதை அடி ஒற்றி உயிர் புகழ்க்கு விற்ற சடாயு என்று புகழப் பெற்றது. இராமபிரான் சடாயுவின் தியாகத்தைத் தெய்வ மரணம் என்று பேசுவான். (கம்ப. 6477.) சுக்கிரீவன், “காட்டிலே கழுகின் வேந்தன் செய்தன காட்ட மாட்டேன்” (கம்ப. 6933) என்று பேசி வருந்துவான். சம்பந்தப் பெருமான் சடாயுவைப் பத்துப் பாசுரங்களாலும், போற்றுவார் (புள்ளிருக்கு வேளூர்ப் பதிகம்) வந்து சார்ந்தான் என்பதில் உள்ள வந்து அசை என்றும் கொள்ளலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Mother, the lord, in that state, from there, searching for you
- through the dense great forests, the rivers and the mountains,
- like a mechanical figure that moves without the sweet breath of life,
- came upon Caṭāyu, who had sold his life for glory.
What the poem says
Aṉumaṉ goes on. Irāmaṉ left the hut and searched for Cītai through thick forests, rivers and mountains, moving like a lifeless puppet worked by machinery.
So he came upon Caṭāyu, the vulture king who had fought Irāvaṇaṉ to save Cītai and given his life for honour, as the old Tamil poems say the noble do. Irāmaṉ later calls Caṭāyu's death a divine death, and the saint Campantar praises him in a hymn of ten verses.