கம்பராமாயணம் 5357 · சுந்தர 5.82

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'எவ்வழி ஏகிற்று அன்னான்? யாண்டையான்? உறையுள் யாது?
செவ்வியோய்! கூறுக! 'என்னச், செப்புவான் உற்ற செவ்வி,
வெவ்விய விதியின் கொட்பால், வீடினன் கழுகின் வேந்தன்;
எவ்விய வரி வில் செங்கை இருவரும் இடரின் வீழ்ந்தார்.

பொருள் · Meaning in Tamil

(இராமபிரான்) செவ்வியோய் - செம்மைப்பண்புடையவளே ! அன்னான் - அந்த இராவணன்; எவ்வழி ஏகி உற்றான் - எந்த வழியில் போனான்; யாண்டையான் - அவன் தற்போது எங்கே உள்ளான்; உறையுள் யாது - அவன் தங்கும் இடம் எது; கூறுக என்ன - கூறுவாயாக என்று கூற; கழுகின் வேந்தன் - கழுகுக்குல அரசனான சடாயு; செப்புவான் உற்ற செவ்வி - அதற்கு மறுமொழி கூறத் தொடங்கும் போது; வெவ்விய - கொடுமையான; விதியின் கொட்பால் - விதியின் சுழற்சியினாலே; வீடினன் - (சடாயு) இறந்தான் (அதுகண்டு); எவ்விய - அம்புகளை ஏவும்; வரிவில் செங்கை - கட்டமைந்த வில் ஏந்திய சிவந்த கையினை உடைய; இருவரும் - இராமனும் இலக்குவனும்; இடரின் வீழ்ந்தார் - துன்பத்தில் அழுந்தினர்.

பிறன் பொருட்டுஉயிர் நீத்த பண்பு நோக்கிச் செவ்வியோய் ! என்று சடாயு புகழப் பெற்றான். சம்பந்தப் பெருமான் விடைத்து வரும் இலங்கைக் கோன் மலங்கச் சென்று இராமற்காய்ப் புடைத்தவனைப்பொருது அழித்தான்என்பர் இப் பதிகம், கவிச்சக்கரவர்த்திக்கு மிகமிக உதவியமை அறிக. சம்பந்தர் “விடைத்துவரும் இராவணன்” என்றார். கவிச்சக்கரவர்த்தி “வெங்கண் எரியப் புருவம் மீதுற விடைத்தான்” (கம்ப. 3255) என்பர் மாரீசனை விடைத்து வந்த இராவணன் என்று திருமுறைக்குப் பொருள் கூற வேண்டும். சேக்கிழாருக்கு அடுத்த படி திருமுறை வல்லாளன் கம்பனே. இங்ஙனம் பலவுள. கம்பனுக்கு இராவணனின் முக்கோடி வாழ்நாளையும் வழங்கியது திருமுறைகளே.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "By which way did he go? Where is he? What is his dwelling?
  2. Tell me, good one!" he said; and at the moment he was about to reply,
  3. by the turning of cruel fate, the king of the vultures died;
  4. and the two with red hands holding striped bows that let fly arrows fell into grief.

What the poem says

Irāmaṉ asked Caṭāyu which way Irāvaṇaṉ had gone, where he was and where he lived. But just as the dying vulture king was about to answer, cruel fate took his life.

Irāmaṉ and Ilakkuvaṉ were plunged into grief, left without the one clue they needed. The commentary notes how much Kampaṉ drew on Campantar's hymn about Caṭāyu, and recalls the funeral rites Irāmaṉ himself performed for the bird, acting as the son he never had.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ev vaḻi ēkiyuṟṟāṉ? yāṇṭaiyāṉ? uṟaiyuḷ yātu?
cevviyōy! kūṟuka! 'eṉṉa, ceppuvāṉ uṟṟa cevvi,
vevviya vitiyiṉ koṭpāl, vīṭiṉaṉ kaḻukiṉ vēntaṉ;
evviya vari viṟ ceṅ kai iruvarum iṭariṉ vīḻntār.