கம்பராமாயணம் 5358 · சுந்தர 5.83
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அயர்ந்தவர் - மனம்சோர்ந்த இராமலக்குவர்கள்; அரிதின் தேறி - சிரமப்பட்டுத் தெளிந்து (அவர்கள்); ஆண் தொழில் தாதைக்கு - ஆண்மைத்தொழில் புரிந்த தந்தைக்கு; ஆண்டு செயத் தகு கடன்கள் யாவும் - அவ்விடத்துச் செய்ய வேண்டிய கடமைகள் யாவற்றையும்; தேவரும் மருள - தேவர்களும் வியந்து மருட்சியடைய; செய்தார் - செய்து நிறைவேற்றினர்(பிறகு) (இராமலக்குவர்கள்); கயத் தொழில் அரக்கன் தன்னை - கயமைத்தொழிலில் வல்லஇராவணனை; நாடி நாம் காண்கும் என்னா - நாம் தேடிக் கண்டு பிடிப்போம் என்று கருதி; புயல் தொடும் - மேகமண்டலத்தை அளாவிய, குடுமிக் குன்றும் - சிகரத்தை உடைய மலைகளையும்; கானமும் - காடுகளையும் (கடந்து); கடிது - விரைந்து; போனார் - சென்றனர்.
கயமைத் தொழில் என்பது கயத் தொழில் என்று வந்தது; தம்மை நியமிப்பார் இன்றி மனம் விரும்பியபடி செய்பவன் கயவன்.
கடன் என்றது இறுதிச் சடங்கை. சேக்கிழார் பெருமான், நாவரசர் தாய் தந்தையர்க்குச் செய்த கடனை; மனம் தேற்றத் துயர் ஒழிந்து பெருவானம் அடைந்தாற்குச் செய்கடன்கள் பெருக்கினார் என்பர் இராமபிரான் தாதையாகிய சடாயுவுக்குச் செய்த இறுதிச் சடங்கு முன்பு பேசப் பெற்றது. “கார் அதில் ஈட்டத் தோடும் சந்தனம் குவித்து... தருப்பையும் பூவும் சிந்தினர்” என்றும், “ஏந்தினன் இருகை நன்றாய் ஏந்தினன் ஈமம் தன்மேல், சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனர் தலையின் சாரல் காந்து எரி காய மூட்டிக் கடன் முறை கடவா வண்ணம் நேர்ந்தனன்” என்றும் (கம்ப. 3536-37) என்று பெருமான் செய்த இறுதிக் கடன் கல்நெஞ்சும் உருகக் காட்டப் பெற்றது. தென்புலத்தார் கடன் புதல்வரால் நிறைவு செய்யப் பெறும்; புதல்வர் இன்றி இறந்த சடாயுவுக்கு இறைவனே புதல்வனாக வந்து இறுதிக்கடன் செய்தனன். இதனால் தியாகிகட்கு இறைவனே இறுதிக் கடனும்
ஆங்கிலம் · English translationAI
Translation
- The stricken pair, recovering with difficulty, there for the father of heroic deeds
- performed all the rites that were fitting, so that even the gods marvelled;
- "Let us search for the demon of base deeds and find him," they said,
- and swiftly went through forests and mountains whose crests touch the clouds.
What the poem says
Recovering with difficulty from their grief, Irāmaṉ and Ilakkuvaṉ performed the funeral rites for Caṭāyu, their heroic 'father', so perfectly that even the gods were amazed.
Then, resolved to track down the vile demon, they hurried on through forests and over cloud-capped mountains. The commentary defines a base man as one who does whatever he pleases, with no one to restrain him.