கம்பராமாயணம் 5359 · சுந்தர 5.84

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அவ்வழி நின்னைக் காணாது அயர்பவன், அரிதில் தேறிச்
செவ்வழி நயனம் செல்லும் நெடுவழி சேறு செய்ய,
வெவ் அழல் உற்ற மெல் என் மெழுகு என அழியும் மெய்யன்,
இவ்வழி இனைய பன்னி, அறிவு அழிந்து, இரங்கல் உற்றான்.

பொருள் · Meaning in Tamil

அவ்வழி - அந்தஇடங்களில்; நின்னைக் காணாது - உன்னைக் காணாமையால்; அயர்த்தவர் - கலங்கிய இராமலக்குவர்; அரிதில் தேறி - ஒருவாறு தெளிவு பெற்று; செவ் அழி நயனம் - (அழுததால்) செவ்விகுன்றிய கண்கள்; செல்லும் நெடுவழி - அவர்கள் செல்லும் வழியை; சேறு செய்ய - (கண்ணீரால்) சேற்றை உண்டு பண்ணவும்; வெவ் அழல் உற்ற - (இராமன்) கொடிய நெருப்பை அடைந்த; மெல்லென் மெழுகு என அழியும் - மெல்லிய மெழுகுபோல் இளைக்க நின்ற; மெய்யன் - உடம்புடையனாய்; இவ்வழி - இந்த நிலையில்; இனைய பன்னி - இந்த வார்த்தைகளைக் கூறி; அறிவு அழிந்து - அறிவு கெட்டு; இரங்கல் உற்றான் - மனம் கரைந்தான்.

காணாதுஅயர்ந்தவர் இருவராதலின் பன்மையாகவும், பிரிவுத் துயரால் பெரிது இரங்கிப் புலம்பியவன் இராமன் ஒருவனே ஆதலால் மெய்யன், உற்றான் என்று ஒருமையாகவும் கூறினர். செவ்வழி என்பதற்கு, சிவந்த காந்தி வழிகிற, என்றும் (மகாவித்துவான் வி, கோவிந்தப் பிள்ளை) செம்மை மிகுந்த என்றும் (வை, மு,கோ) செம்மை நிறம் மிகுந்த (அண்ணா - பதிப்பு) நன்றாக என்றும் (அடை - பதிப்பு) உரைகள் கூறப் பெற்றன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Not finding you in those places, he grew faint; recovering with difficulty,
  2. while his reddened eyes turned the long road he walked to mud,
  3. his body wasting like soft wax set in fierce fire,
  4. in this way, saying such things, his reason gone, he lamented.

What the poem says

Searching everywhere and not finding Cītai, the brothers were overcome. Irāmaṉ's red-rimmed eyes wept so much that the road beneath him turned to mud, and his body melted away like soft wax held in fire.

Losing all composure, he began to lament aloud. The commentary notes the shift from plural to singular: both brothers despair, but it is Irāmaṉ alone who breaks into lament. The verses that follow describe his near-madness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1av vaḻi niṉṉaik kāṇātu ayarpavaṉ, aritil tēṟi
cev vaḻi nayaṉam cellum neṭu vaḻi cēṟu ceyya,
vev aḻal uṟṟa melleṉ meḻuku eṉa aḻiyum meyyaṉ,
iv vaḻi iṉaiya paṉṉi, aṟivu aḻintu, iraṅkaluṟṟāṉ.