கம்பராமாயணம் 536 · பால 9.70
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இனைய நாட்டினில் - இத்தகைய மிதிலை நாட்டிலே; இனிது சென்று - இனிய மகிழ்ச்சியோடு அடைந்து; இஞ்சி சூழ் மிதிலை - மதில்களால் சூழப்பட்டுள்ள மிதிலை நகரை; புனையும் அலங்கரிக்கின்ற; நீள்கொடிப் புரிசையின் - உயர்ந்த கொடிகளையுடைய புறமதிலின்; புறத்து வந்து இறுத்தார் - வெளியிலே வந்து தங்கினார்கள்; மனையின் மாட்சியை - (அவ்வாறு தங்கி) இல்லறத்திற்குச் சிறப்பான கற்பினை; அழித்து இழி - அழியச்செய்ததால் இழிவை அடைந்தன; மாதவப் பன்னி - பெருந்தவத்தனான கெளதமரின் மனைவியான அகலிகையின்; கனையும் மேடு உயர் - (சாப உருவில்) அடர்ந்த மேடாக உயர்ந்து தோன்றுகின்ற; கருங்கல் - கருங்கல்லாகக் (கிடப்பதனை); ஓர் வெள்ளிடை - ஒரு வெட்டவெளியிலே; கண்டார் - கண்டார்கள்.
விசுவாமித்திரன் முதலிய மூவரும் மிதிலையின் மதிலுக்குப் புறத்தே தங்கினர். அப்பொழுது கெளதம முனிவன் மனைவியான அகலிகை அம்முனிவனின் சாபத்தால் கல்லாய்க் கிடக்கும் இடத்தைப் பார்த்தார்கள். பன்னி: பத்நி(மனைவி) என்னும் வடசொல் பன்னி என மருவியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Passing happily through such a land, outside the long-bannered rampart
- that adorns walled Mitilai they came and halted;
- and there, in an open space, they saw a black stone rising on a mound —
- the wife of a great ascetic, who had ruined the honour of her home and fallen low.
What the poem says
The three travellers arrive outside the walls of the city of Mitilai and stop there. In an open space they see a black rock on a mound. It is Akalikai (Ahalyā), wife of the great sage Kautamaṉ (Gautama). She lost her chastity, the glory of a household, and her husband's curse turned her to stone. This is the episode that gives the chapter its name.