கம்பராமாயணம் 5365 · சுந்தர 5.90
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(இராமபிரான்) வான் உயர் - விண்ணில் உயர்ந்துள்ள; தேரின் வைகும் - தேரிலே வீற்றிருக்கும்; நந்தா விளக்கின் வரும் - குறைவுபடாத சூரியன் பால் உதித்த, எம்குல நாதன் வாழும் - எமது குலத்தவனான சுக்கிரீவன் தங்கிய; சந்துஆர் - சந்தன மரங்கள் செறிந்த; தடங்குன்றினில் - பெரிய இருசிய மூகமலையில்; இளையானொடு வந்தான் - இளைய பெருமாளுடன் வந்தான்; (அங்கு) செந்தாமரைக் கண்ணனும் - தாமரை போன்ற கண்களை உடைய இராமபிரானும்; தன் உயிர்க்காதலோனும் - தன்னுடைய உயிர் மேல் அன்புள்ள சுக்கிரீவனும்; தேவர் உய்ய - தேவர்கள் வாழ்வு பெற, நட்டனர் - நட்புப் பூண்டனர்
நந்தா விளக்கு -சூரியன். வருதல் - தோன்றுதல் (பிறத்தல்) தசரதன் மதலையாய் வருதும் (திரு அவதாரம்) சந்து - சந்தனம். அந்துவன் பாடிய சந்து செழு நெடுவரை (அகம் 59) தாமரைக்கண்ணன் - திருமால் (இராமபிரான்) தன்உயிர்க்காதலோன் - சுக்கிரீவன் - தன்னுடைய உயிர்மேல் ஆசை வைத்தவன்வாலிக்குப் பயந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ரிசியமுக பர்வதம் வந்தவன்என்ற வரலாறு காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He came with his younger brother to the great hill thick with sandalwood,
- where lives the lord of our race, born of the undying lamp that sits
- in the chariot high in the sky; and he who loved his own life
- and the red-lotus-eyed one became friends, so that the gods might be saved.
What the poem says
Aṉumaṉ tells how Irāmaṉ and Ilakkuvaṉ came to the sandalwood-covered hill of Ṛṣyamūka, where Cukkirīvaṉ, lord of the monkeys and son of the Sun, the never-failing lamp riding its chariot across the sky, was living.
There the lotus-eyed Irāmaṉ and Cukkirīvaṉ, who had fled there in fear for his life from his brother Vālī, made a pact of friendship, an alliance that would save the gods from the demons.