கம்பராமாயணம் 5364 · சுந்தர 5.89

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வேறு உற்றமனத்தவன் - வேறுபட்ட மனத்தை உடையஇராமபிரான்; இன்ன - இப்படிப்பட்டவற்றை, விளம்பி நோவ - சொல்லி வருத்தம் அடைய(அப்போது); ஆறு உற்ற - ஆறுதலைப் பெற்ற; நெஞ்சின் - மனத்தைஉடைய தனது ஆர் உயிர் ஆய - தனது அரிய உயிர் போன்ற; தம்பி - தன்னுடைய தம்பியான இலக்குவன்; கூறுற்ற - எடுத்துக்கூறிய; சொல் என்றுஉள - சொற்கள் என்று உள்ள; கோதறு - குற்றம் அற்ற; நல் மருந்தால் - நல்ல மருந்தினால்; தேறுற்று - தெளிவு பெற்று; உயிர்பெற்று - வலிமைபெற்று; சில இயல்வும் - சில உபாயங்களையும்; தேறல் உற்றான் - ஆராயத் தொடங்கினான்.

உயிர்பெற்று -வலிமைபெற்று. உயிர் படைத்து.. ஓடல் உற்றது வடவைதத (வருணனை 50) கம்பன் கழகம், உயிர் - வலிமை என்று விளக்கிற்று இயலவு - உபாயம். வேள்வியும் நல் அறமும் இயல்பு (முதல் - அந - 12) இவ்வுரையும் மேற்கோளும் வழங்கியது அண்ணாமலைகழகப்பதிப்பு. உபாயம் என்றது பிராட்டியைத் தேடுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நெறியை. ஆர் உயிராய தம்பி என்ற தொடரையும், “தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர் இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன்” (கம்ப. 3969) என்னும் அடிகளையும் ஒப்பிடுக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As he of the distracted mind said such things and suffered,
  2. his younger brother, his own precious life, with a steadied heart,
  3. spoke words that were a pure and good medicine; by them
  4. he recovered, regained his strength, and began to consider some means.

What the poem says

While Irāmaṉ raved in this way, Ilakkuvaṉ, who had kept his composure and whom Irāmaṉ loved as his own life, spoke to him calmly.

His words acted like a flawless medicine. Irāmaṉ came back to himself, recovered his strength, and began to think about practical ways of searching for Cītai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vēṟuṟṟa maṉattavaṉ iṉṉa viḷampi nōva
āṟuṟṟa neñcil taṉatu ār uyir āya tampi
kūṟuṟṟa col eṉṟu uḷa kōtu aṟu nal maruntāl
tēṟuṟṟu uyirpeṟṟu iyalvum cila tēṟaluṟṟāṉ.