கம்பராமாயணம் 5363 · சுந்தர 5.88
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொன்மான்உருவால் - (அரக்கன்) பொன் போலும் மான் வடிவத்தால்; சில மாயை புணர்க்க அன்றோ - சில மாயைகளைச் செய்ததனால் அல்லவா; என்கண் - என்னிடத்திலிருந்து; என்மான் - என்னுடைய மான் போன்ற சீதை; இப்பொழுது - இந்தச் சமயத்தில்; அகல்வுற்றனள் - பிரிந்து சென்றனள்; என்னா - என்று கூறி; நன் மான்களை நோக்கி - பிறர்க்குத் தீங்கு செய்யாத மான்களைப் பார்த்து; இன்றே - இன்றைய தினமே; வில் மாண் கொலை வாளியின் - வில்லிலே மாட்சிமைப் பட்ட கொலைத் தொழில் செய்யும் அம்பாலே; நும் நாமமும் - உங்களுடைய பெயரையும்; மாய்ப்பேன் - அழிப்பேன்; என்று வெகுண்டு நின்றான் - என்று கூறிச் சீறி நின்றான்.
புணர்த்த -செய்ய. தூமமென் குழலியர் புணர்த்த சூழ்ச்சியால் (திருவவதாரம் 47) “வில் மாண்” என்று பாடம் கொள்வாரும் உளர் வில்மாண் - வில்லுக்குச் சுவாமியான இராமன் என்பது பழைய உரை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Was it not because some trickery was worked through the form of a golden deer
- that my deer has now been parted from me?" he said,
- and looking at the gentle deer, "This very day I shall wipe out even your name
- with the killing arrows of my bow," he said, and stood there in rage.
What the poem says
Irāmaṉ now turns on the harmless deer of the forest. It was a deer, the magic golden one, that took his own 'deer', Cītai, from him.
So he vows to wipe out the whole deer kind with his arrows that very day, so that not even their name survives. The irony is plain: the innocent creatures pay for a demon's disguise.