கம்பராமாயணம் 5379 · சுந்தர 5.104
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உலகு எலாம்அளந்த நாயகன் - எல்லா உலகங்களையும் அளந்த திருமால்; ஈது - இது; ஏண் இலது - வலிமை இல்லாதது; ஒரு குரங்கு - ஒருஅற்பக் குரங்கு; என்று எண்ணலா - என்று கருத முடியாத; ஆணியை அனுமனை - அஞ்சுரு வாணி போலும் அனுமனை; அமைய நோக்குவான் - நன்றாகப் பார்த்து; சேண் உயர் பெருமை - ஆகாயத்தை அளாவிய இவர் சிறப்பு; ஓர் திறத்தது அன்று - ஒரு வகையானது அன்று; எனா - என்று கூறி; நாண் உறும் - வெட்கம் அடைவான்.
உலகு அளந்ததிருமால், அனுமனை நன்கு பார்த்து, இவன் சிறப்பு ஒருவகையானது அன்று என்று கூறி நாணம் அடைவான். ஆணி என்பதற்கு 'அஞ்சுருவாணி' என்று கூறவேண்டும். தேரின் நடுவில் எல்லாவற்றுக்கும் நடுநாயகமாக ஒரு நீண்ட கோல் இருக்கும். அது ஆணி என்று பேசப்படும். “தடையற்ற தேரில் அஞ்சுருவாணி போலவே தள்ளில் அசையாது நிற்கும்” என்பர் தாயுமானவர் (மெளனகுரு 9) ‘ஆணியாய பழி’ என்னும் (கம்ப. 3561) அயோமுகிப் பாடலுக்கு அமைந்த பழைய உரை காண்க. அது ஆணி - அஞ்சுருவாணி என்று வரைந்தது. உலகு எலாம் அளந்த நாயகன் - சூரியன் என்று பொருள் கூறுவது நேரிது. திருமால் அனுமன் பேருருக் கண்டு நாணான். மகிழ்வான். அவன் தன் தூதனைக் கண்டு சிறப்பியாமல் நாணுவானோ...
ஆங்கிலம் · English translationAI
Translation
- Looking closely at Aṉumaṉ, the axle-pin of the world, whom none could think
- "a mere monkey, a feeble thing,"
- "His greatness, rising so high, is of no ordinary kind," says
- the Lord who measured all the worlds, and is put to shame.
What the poem says
Seeing Aṉumaṉ in his cosmic form, no one could think of him as just a weak monkey. He is like the central axle-pin of a chariot, the firm support on which everything rests.
Even the Lord who measured all the worlds in three strides would look at him and feel outdone by such height. The commentary prefers to take 'the one who measured the worlds' here as the Sun, whose rays cover all things, since Viṣṇu would rejoice rather than feel shame at his own messenger's greatness.