கம்பராமாயணம் 538 · பால 9.72

Section பால காண்டம் / 9. அகலிகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மா இரு விசும்பில் கங்கை மண் மிசை இழித்தோன் மைந்த!
மேயின உவகையோடு மின் என ஒதுங்கி நின்றாள்,
தீ வினை நயந்து செய்த தேவர் கோன் தனக்கு செங்கண்
ஆயிரம் அளித்தோன் பன்னி, அகலிகை ஆகும், என்றான்.

பொருள் · Meaning in Tamil

மா இரு விசும்பின் - மிகப் பெரிய ஆகாயத்திலிருந்து; கங்கை மண்மிசை - கங்கா நதியை இப்பூமிக்கு; கொணர்ந்தோன் மைந்த - கொண்டு வந்த பகீரதன் என்னும் பேரரசன் (குலத்தில் பிறந்த) மைந்தனே!; மேயின உவகையோடு - பொருந்தின மகிழ்ச்சியோடு; மின்னென - மின்னல்கொடிபோல; ஒதுங்க நின்றாள் - ஒருபக்கத்தே (நாணத்தால்) ஒதுங்கி நின்ற இவள்; தீவினை - (மற்றொருவன் மனைவியைச் சேர்தலாகிய) கொடுந்தொழிலை; நயந்து செய்த - விரும்பிச் செய்த; தேவர்கோன் தனக்கு - தேவர்கள் தலைவனான இந்திரனுக்கு; செங்கண் ஆயிரம் - சிவந்த ஆயிரம் கண்களை; அளித்தோன் பன்னி - கொடுத்த கெளதம முனிவனுடைய பத்தினியான; அகலிகை ஆகும் - அகலிகை ஆவாள் என்றான்.

அகலிகை: தன் சிலை வடிவம் நீங்கி பெண்வடிவு பெற்று மகிழ்ச்சியோடு நாணத்தால் ஒதுங்கி நிற்பவளே, கெளதம முனிவனின் மனைவியான அகலிகையாவாள். இந்திரன் ஆயிரம் கண்கள் பெற்றமை: இந்திரன் மாற்றான் மனைவியைச் சேர்தலாகிய கொடுஞ்செயலை விரும்பிச் செய்ய அதன் பொருட்டுக் கெளதம முனிவர் அவனுக்குச் சாபம் தந்தார். பின்னர் அம் முனிவரை வேண்டக் குறிகள் ஆயிரம் கண்களாகுமாறு அருள் பெற்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'O son of the line of him who brought Gaṅgai down to earth from the vast, great sky!
  2. She who stands aside like a flash of lightning, with the joy that has come upon her,
  3. is the wife of him who gave a thousand red eyes to the king of the gods,
  4. who wilfully did an evil deed; she is Akalikai,' he said.

What the poem says

Vicuvāmittiraṉ addresses Irāmaṉ as a descendant of Pakīrataṉ, who brought the Gaṅgai down from the sky. He tells him who the woman is. Free of the stone and back in her own form, she stands to one side, glad and shy, slender and bright as lightning. She is Akalikai, wife of the sage Kautamaṉ.

The sage is described as the one who "gave Indra a thousand red eyes." The commentary explains that Kautamaṉ cursed Indra for seducing another man's wife, and that later, when Indra begged for mercy, the shameful marks of the curse were turned into a thousand eyes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mā iru vicumpiṉ kaṅkai maṇmicaik koṇarntōṉ mainta!
mēyiṉa uvakaiyōṭu miṉ eṉa otuṅki niṉṟāḷ,
tīviṉai nayantu ceyta tēvarkōṉtaṉakkuc ceṅ kaṇ
āyiram aḷittōṉ paṉṉi, akalikai ākum, eṉṟāṉ.