கம்பராமாயணம் 5389 · சுந்தர 5.114

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

திருவின் முகத்துத் திரு அன்னாள் - திருமகளின் முகத்தில் உள்ள செல்வம் போலும் பிராட்டி அனுமனை நோக்கி); இன்றே - இன்றைய தினமே, மாயச்சிறை நின்றும் - மாயை போன்ற சிறையிலிருந்து; மீண்டேன் - திரும்பியவள் போன்றுள்ளேன்; என்னை ஒறுத்தாரை - என்னைத் துன்புறுத்திய அரக்கர்களை; குலங்களோடு - அவர்களுடைய சுற்றங்களுடன்; வேர் அறுத்தேன் - அடியோடு தொலைத்து விட்டவள் ஆவேன்; எம் கோன் - எம்பிரானாகிய இராமபிரானின்; பொலங்கழலும் - வீரக் கழல் அணிந்த திருவடியை; பூண்டேன் - தலையில் சுமந்தவள் ஆனேன்; புகழே அன்றி - புகழையே அல்லாமல்; புன் பழியும் - அற்பப் பழிச் சொல்லையும்; தீண்டேன் - தீண்டமாட்டேன் (ஆகையால்) (இனி); மாண்டேன் எனினும் - இறந்துபட்டாலும், பழுது அன்று - (என் ஆன்மாவுக்குக்) குறைவு இல்லை; என்று - என்று கூறி; மகிழ்வுற்றாள் - மகிழ்ச்சியடைந்தாள்.

மாயச்சிறை - மாயைபோலும் சிறை. திருவின் முகத்துத் திரு - என்ற தொடர் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தை அடிப்படையாகக் கொண்டது. திருவுக்கும் திருவாகிய செல்வா (7.7.1) என்பது பெரிய திருமொழி. திருமாலின் சாரம் திருமகள்; திருமகளின் சாரம் சிறையிருந்த செல்வி என்க. திருமகள் அருளுடையவள். பிராட்டி அருளே வடிவமானவள். என்பது குறிப்பு. அருளது சக்தி என்று சித்தி பேசும். சக்தி - சாரம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Even if I die, there is no harm; this very day from the cruel prison
  2. I have come back; those who tormented me, I have torn out by the root with their kin;
  3. I have worn my lord's golden-anklet feet; not even the slightest blame, only fame,
  4. will touch me!' So she rejoiced in heart, she who is the beauty in the face of Tiru.

What the poem says

Cītai's spirits lift as she hears Aṉumaṉ. Speaking as if rescue had already happened, she feels she is free, her tormentors are destroyed, and she has bowed at Irāmaṉ's feet. Her name is safe now, so death itself would not matter.

She is called the beauty in the face of Tiru, the goddess Lakṣmī. The commentary traces the phrase to a hymn of Tirumaṅkaiyāḻvār, in which Viṣṇu is the treasure of the goddess of fortune herself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'māṇṭēṉ eṉiṉum paḻutu aṉṟē; iṉṟē māyac ciṟainiṉṟum
mīṇṭēṉ; eṉṉai oṟuttāraik kulaṅkēḷāṭum vēr aṟuttēṉ;
pūṇṭēṉ em kōṉ polaṅ kaḻalum; pukaḻē aṉṟip puṉ paḻiyum
tīṇṭēṉ! 'eṉṟu maṉam makiḻntāḷ, tiruviṉ mukattut tiru āṉāḷ.